குஷ்பு, ஹெச். ராஜாவின் நிலை என்ன?

kushboo h raja
By Fathima May 02, 2021 07:10 AM GMT
Report

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் கடந்த ஏப்ரல் 6ம் தேதி நடைபெற்று முடிந்தது. தபால் வாக்குகள் எண்ணப்பட்டு தற்போது அடுத்தடுத்த சுற்றுகளில் வாக்குகள் எண்ணப்படுகின்றன.

அதிமுக கூட்டணியில் பாஜக 20 இடங்களில் போட்டியிடுகிறது, இதில் தாராபுரம், உதகை மற்றும் மதுரை வடக்கு தொகுதியில் மட்டும் பாஜக முன்னிலை வகித்து வருகிறது.

நட்சத்திர வேட்பாளர்களாக வலம் வந்த அண்ணாமலை, குஷ்பு மற்றும் வானதி சீனிவாசன் பெரும் பின்னடையை சந்தித்துள்ளனர்.

*அரவக்குறிச்சியில் போட்டியிடும் அண்ணாமலை பின்னடைவில் இருக்கிறார். அரவக்குறிச்சியில் திமுக வேட்பாளர் இளங்கோ முன்னிலை வகிக்கிறார்.

*தாராபுரத்தில் போட்டியிடும் எல்.முருகன் பின்னடைவு வகிக்கிறார்.

*காரைக்குடியில் மண்ணின் மைந்தன் ஹெச்.ராஜா பின்னடைவை சந்தித்திருக்கிறார். இவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் மாங்குடி 2805 வாக்குகள் பெற்றுள்ளார். ஹெச்.ராஜா 1393 வாக்குகள் பெற்றுள்ளார்.

*ஆயிரம் விளக்கில் களமிறங்கிய குஷ்பு திமுக வேட்பாளர் எழிலனை விட பின்னடைவில் இருக்கிறார்.எழிலன் 3330 வாக்குகள் பெற்றுள்ள நிலையில், குஷ்பு 1393 வாக்குகள் பெற்றுள்ளார்.

*கோவை தெற்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் மயூரா ஜெயக்குமார் 70 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை - கமல்ஹாசன், வானதி ஸ்ரீனிவாசனுக்கு பின்னடைவு