நடிகை குஷ்பு ட்விட்டர் கணக்கு முடக்கம் - கொந்தளித்த குஷ்பு!

நடிகையும், அரசியல்வாதியுமான குஷ்புவின் டுவிட்டர் பக்கம் மர்மநபர்களால் முடக்கப்பட்டு உள்ளதாகவும், அவருடைய ட்வீட்கள் அனைத்து நீக்கப்பட்டுள்ளதாகவும் நடிகை குஷ்பு புகார் அளித்துள்ளார்.

கடந்த சில ஆண்டுகளாகவே பிரபலங்களின் ட்விட்டர் பக்கங்கள் ஹேக் செய்யப்படுவது தொடர் கதையாக இருந்து வருகிறது.

அந்த வகையில் நடிகையும் பாஜக பிரமுகருமான குஷ்புவின் டுவிட்டர் பக்கம் தற்போது மர்ம நபர்களால் முடக்கப்பட்டு உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. மேலும் அவரது அனைத்து டுவிட்டுகளும் அழிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் நடிகை குஷ்பு புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து, குஷ்புவின் டுவிட்டர் பக்கத்தை மீட்க அவரது தரப்பினர் தொழில்நுட்ப வல்லுநர்களை நாடி வருவதாகவும் விரைவில் அவரது டுவிட்டர் பக்கம் மீட்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

ஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.

பதிவிறக்கம் செய்யுங்கள்