என்னோட ஃபேவரைட் டீச்சர்.. கலைஞருடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்த குஷ்பு - பாஜக அதிர்ச்சி!

Twitter DMK BJP Kushboo
By Vinothini Sep 05, 2023 10:25 AM GMT
Report

ஆசிரியர் தினத்தில் குஷ்பு பதிவிட்டுள்ள டுவீட் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகை குஷ்பு

தமிழ் சினிமாவில் 90ஸ் களில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை குஷ்பு. இவர், ரஜினிகாந்த், கமல், பிரபு, சத்தியராஜ், சரத்குமார் என டாப் நடிகர்கள் பலருடனும் நடித்துள்ளார். இதேபோல் தெலுங்கு சினிமாவிலும் முன்னணி நடிகர்கள் பலருக்கும் ஜோடியாக நடித்துள்ளார். பின்னர் இயக்குநர் சுந்தர்.சி-யை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார்.

kushboo-tweet-on-teachers-day

இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர், இவர் சீரியல் மற்றும் திரைப்படங்களில் நடித்து கலக்கிவந்தார். இவர் தற்போது தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக உள்ளார், மேலும், அரசியலிலும் தீவிரம் காட்டி வருகிறார்.

குஷ்பு டுவீட்

இந்நிலையில், இன்று செப்டம்பர் 5, ஆசிரியர் தினத்தில் பலர் தனது ஆசிரியர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வரும் சமயத்தில், இவர் டுவீட் ஒன்றை வெளியிட்டுள்ளார். இவர் அரசியல் ஆசானான முன்னாள் முதலமைச்சர் கலைஞரை நினைவுபடுத்தி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், “அரசியல் பள்ளியில் எனது முதல் நாள். என் விருப்பமான ஆசிரியரை இனிய நினைவுகளுடன் நினைவு கூருகிறேன்" என்று பதிவிட்டுள்ளார். அதில் இவர் கலைஞருடன் நின்றுகொண்டிருக்கும் புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார்.

தற்பொழுது தி.மு.க-விற்கு பாஜக எதிர்ப்பு தெரிவித்து வரும் இந்த சமயத்தில் இவர் பதிவிட்டுள்ள டுவீட் பாஜக-வினரை பதர் வைத்துள்ளது.