நடிகை குஷ்புவுக்கு 2வது திருமணமா? அதிர்ச்சியில் சுந்தர் சி

Marriage Kushboo Sundar C
By Thahir Aug 22, 2021 06:42 AM GMT
Report

தமிழில் கார்த்தி நடித்த 'வருஷம் 16' படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் நடிகை குஷ்பூ. 90 -களில் தமிழ் சினிமாவில் கனவுக்கன்னியாக வலம்வந்தார்.

தமிழில் அறிமுகமாகும் முன்பே தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்தார்.

அதுமட்டுமல்லாமல் ஹிந்தியில் 1980லிருந்தே குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். இவர் தமிழில் ஏராளமான ரசிகர் பட்டாளத்தை கொண்டவர்.

இவருக்காக தமிழ் ரசிகர்கள் கோவில் கட்டியதெல்லாம் வேற லெவல். இவர் 2000ஆம் ஆண்டு இயக்குனர் சுந்தர்.சி -யை திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு முன்பாகவே நடிகர் பிரபுவுடன் சேர்த்து கிசுகிசுக்கப்பட்டார்.

திருமணத்திற்குப் பின் சின்னத்திரையிலும் கொடிகட்டி பறந்தார். அதிலும் ஜெயா டிவியில் இவர் தொகுத்து வழங்கிய ஜாக்பாட் நிகழ்ச்சியை, இவர் விதவிதமாக அணிந்துவரும் உடையை பார்ப்பதற்காகவே பெண்கள் டிவிமுன் அமர்ந்தனர்.

அரசியலிலும் தீவிர செயல்பாட்டாளரான இவர் திமுக, காங்கிரஸ் கட்சியை தொடர்ந்து தற்போது பாஜகவில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்.

கடந்த சட்டமன்ற தேர்தலில் பாஜக சார்பாக போட்டியிட்டு தோல்வியும் அடைந்தார்.

மேலும், சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் இவர் சமீபத்தில் வெளியிட்ட புகைப்படம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அந்த புகைப்படத்தில் உடல் எடையை வெகுவாகக் குறைத்து 20 வயது பெண் போல் தோற்றமளிக்கிறார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாக, பிரபலங்கள் பலரும் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.

அந்த வகையில், தற்போது ரசிகர் ஒருவர் என்னை திருமணம் செய்துகொள்கிறீர்களா? மேடம் என கேட்டு கமெண்ட் செய்துள்ளார்.