பிரதமரின் கைகளில் வெற்றியை சமர்ப்பிப்பேன்: நடிகை குஷ்பு
ஆயிரம் விளக்கு தொகுதியில் மிகப்பெரிய வெற்றியை பெற்று பிரதமர் மோடி கைகளில் சமர்ப்பிப்பேன் என நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார். ஆயிரம் விளக்கு சட்டமன்ற தொகுதியின் பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளராக நடிகை குஷ்பு அறிவிக்கப்பட்டுள்ளார்.
அதன்பின்னர் நிருபர்களிடம் பேசுகையில், ஆயிரம் விளக்கு தொகுதியில் பா.ஜனதா சார்பில் போட்டியிட வாய்ப்பு அளித்த பா.ஜனதா டெல்லி தலைமை மற்றும் தமிழக தலைமைக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நிச்சயமாக இந்த தொகுதியில் மிகப்பெரிய வெற்றி பெற்று, அதனை பிரதமர் மோடி, பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோரை சந்தித்து இந்த வெற்றியை அவர்களது கைகளில் சமர்ப்பிப்பேன்.
அதே நேரத்தில், மாநில தலைவர் எல்.முருகனின் உதவியும் பெரிய அளவில் இருந்தது. அவருக்கு மிகுந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.