நல்ல சூழலில் வளர்ந்த ஆண்கள் பெண்களை பற்றி தவறாக பேசமாட்டார்கள் - குஷ்பூ

DMK BJP Kushboo
By Thahir Nov 04, 2022 11:26 AM GMT
Report

நல்ல சூழலில் வளர்ந்த ஆண்கள் பெண்களை பற்றி தவறாக பேசமாட்டார்கள் என குஷ்பூ தெரிவித்துள்ளார்.

மகளிர் ஆணையத்தில் புகார் 

நடிகையும், பாஜக நிர்வாகியுமான குஷ்பூ, தன்னை தரக்குறைவாக பேசிய திமுக பேச்சாளர் மற்றும் அவரது பேச்சை ரசித்தபடி அமர்ந்திருந்த அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தேசிய மகளிர் ஆணையத் தலைவர் ஷர்மரேகாவிடம் புகார் அளித்தார்.

நல்ல சூழலில் வளர்ந்த ஆண்கள் பெண்களை பற்றி தவறாக பேசமாட்டார்கள் - குஷ்பூ | Kushboo Speech Against Dmk

அதன் பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த குஷ்பூ, நல்ல சூழலில் வளர்ந்த ஆண்கள் பெண்களை பற்றி தவறாக பேசமாட்டார்கள்.

பெண்கள் குறித்து தவறாக பேசும் போது அதை ரசிக்கவும் மாட்டார்கள். மேலும், இந்த சம்பவம் குறித்து தேசிய மகளிர் ஆணையத் தலைவர் ஷர்மரேகா விசாரணை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளதாக கூறியுள்ளார்.