அமைச்சர் அப்படி செய்தது தவறு ..நமது கவர்னர் அரசை தட்டி கேட்பவர் : குஷ்பு ஆவேசம்
அரசு செய்யும் தவறுகளை தட்டி கேட்கும் கவர்னர் நமக்கு கிடைத்திருப்பதாக நடிகர் குஷ்பு தெரிவித்துள்ளார்.
ஆளுநர் விவகாரம்
தமிழக ஆளுநர் குறித்த சர்ச்சை தான் தற்போது டெல்லி முதல் தமிழ்நாடு வரை அரசியல் பேசு பொருளாக உள்ளது. இந்த நிலையில் ஆளுநர் ஆர்.என் ரவி இன்று டெல்லி சென்ற நிலையில் கன்னியாகுமாரியில் விவேகானந்தரின் 160 ஆவது பிறந்தநாள் நிகழ்ச்சியில் குஷ்பு கலந்து கொண்டார்.
தட்டி கேட்கும் கவர்னர்
அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசினார் அதில், ஒரு அரசாங்கம் தவறு செய்யும் போது தட்டிக் கேட்கவும் அரசாங்கத்தின் செயல்களை மேற்பார்வை செய்யவும் தான் கவர்னர் இருக்கிறார் . அந்த வகையில் அரசின் தவறுகளை தட்டிக் கேட்பவராக நம்முடைய கவர்னர் இருக்கிறார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பொன்முடி செய்தது தவறு
சட்டசபையில் இருந்து கவர்னர் வெளியே போகும்போது அமைச்சர் பொன்முடி அவரை வெளியே போ என சைகை காட்டினார் என்றும் அது மிகப்பெரிய தவறு என்றும் அவர் தெரிவித்துள்ளார்.