வேட்பாளராக களமிறங்கும் சுந்தர்.சி: மனைவி குஷ்பு என்ன சொல்லியிருக்கிறார்?
சுந்தர்.சி வேட்பாளர்
தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள புதிய நீதிக்கட்சிக்கு இரண்டு இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது, ஒரு இடத்தில் இரட்டை இலை சின்னத்திலும், ஒரு இடத்தில் தாமரை சின்னத்திலும் போட்டியிடுகின்றனர்.
இதில் மதுரை மத்திய தொகுதியில் வேட்பாளராக பிரபல இயக்குனரும், நடிகருமான சுந்தர்சி அறிவிக்கப்பட்டுள்ளார்.

வெற்றி உறுதி- குஷ்பு
இதுகுறித்து அவரின் மனைவியும், தமிழக பாஜக துணைத்தலைவருமான குஷ்பு தனது எக்ஸ் தள பக்கத்தில், "தன்னுடைய அரசியல் பயணத்தை சுந்தர் சி துவங்குகிறார். புதிய நீதிக்கட்சி சார்பாக மதுரை தொகுதியில் இயக்குனரும், நடிகருமான சுந்தர் சி வேட்பாளராக களமிறங்குகிறார்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியின் அங்கமாக உள்ள அதிமுகவின் இரட்டை இல்லை சின்னத்தில் அவரது தந்தை தந்தை சிதம்பரம் பிள்ளை, 94 வயதாகும் தாயார் தெய்வானை சிதம்பரம் பிள்ளை நல்வாழ்த்துக்களுடன் இந்த பயணத்தை சுந்தர் சி துவங்குகிறார்.
ஏ.சி. சண்முகம் வழிகாட்டுதலில், கழகப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் ஆதரவுடன் மற்றும் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களின் ஒத்துழைப்புடன் இந்த தேர்தலில் வெற்றி பெறுவார்.

எப்போதும் மக்களின் மனிதனாக அவர் இருப்பார். தமிழ்நாட்டு மக்களை தனது கலைத்திரமையால் கடந்த முப்பது ஆண்டுகளாக மகிழ்வித்து வரும் சுந்தர் சி, தன்னை உருவாக்கிய மக்களுக்கு சிறந்த சேவையை ஆற்றுவார்.
இதில் அவரின் மனைவி என்ற முறையில் பெருமிதம் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.