வெற்றி பெற்றாலும் இப்படிதான் குஸ்தி பண்ணி கொண்டு இருப்பீர்களா? - ராகுலை விமர்சித்த குஷ்பு

india world bjp congress
By Jon Mar 03, 2021 03:59 PM GMT
Report

பாஜக-க்கு எத்தனை தொகுதி கொடுப்பார்களோ, அத்தனை தொகுதியிலும் நாங்கள் ஜெயிப்போம் என குஷ்பூ தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருகின்ற நிலையில், தமிழக அரசியல் களம் சற்று பரபரப்பாக காணப்படுகிறது. இந்த நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் முன்னேற்பாடு பணிகள் மற்றும் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், குஷ்பூ, நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், மீனவர்களுடன் கடலில் குதித்து நீச்சல் அடிப்பதும், மாணவர்களுடன் குஸ்தி பண்ணுவதும் ஒரு தலைவருக்கு அழகில்லை என ராகுல்காந்தியை விமர்சித்த குஷ்பு. நீங்கள் என்ன மாற்றத்தை கொண்டு வருவீர்கள்? திமுக-காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்ற பின்னும் இப்படி தான் மாணவர்களுடன் இணைந்து குஸ்தி பண்ணி கொண்டு இருப்பீர்களா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் அவர் பேசுகையில், பாஜக-க்கு எத்தனை தொகுதி கொடுப்பார்களோ, அத்தனை தொகுதியிலும் நாங்கள் ஜெயிப்போம் எனதெரிவித்துள்ளார்.