எனக்கு கோவில் கட்டியதும் சனாதன தர்மம் தான்...குஷ்பு சுந்தர் ட்வீட்

Udhayanidhi Stalin Tamil nadu DMK BJP Kushboo
By Karthick Sep 05, 2023 04:17 AM GMT
Report

சனாதன விவகாரத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், பாஜகவை சேர்ந்த நடிகை குஷ்புவும் இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

உதயநிதி - சனாதன சர்ச்சை

சென்னையில் சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற தமிழக முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் டெங்கு, மலேரியா போன்ற சனாதனத்தையும் எதிர்ப்பதைவிட ஒழிப்பதே நாம் செய்ய வேண்டியது என பேசியிருந்தார்.

kushboo-questions-udhaystalin-in-sanathana-issue

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் இந்த கருத்து பெரும் சலசலப்பை தேசிய அரசியலில் ஏற்படுத்தி இருக்கிறது. குறிப்பாக பாஜகவினரும், இந்து சமயத்தை தீவிரமாக கடைபிடிப்பவர்களும், இதற்கு கடுமையான விமர்சனங்களை வைத்து வருகின்றனர்.

குஷ்பு ட்வீட்

இந்நிலையில், இது குறித்து பாஜகவை சேர்ந்த நடிகை குஷ்பு தனது கருத்தை ட்விட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், தான் இஸ்லாமிய பின்னணியில் இருந்து வந்தவள், ஆனாலும் மக்கள் தனக்காக கோயில் கட்டினார்கள் என குறிப்பிட்டு, அதுதான் சனாதன தர்மம் என பதிவிட்டுள்ளார்.

kushboo-questions-udhaystalin-in-sanathana-issue

அனைத்தையும் நம்புங்கள், மதிக்கவும், நேசிக்கவும், ஏற்றுக்கொள்ளவும் என சுட்டிக்காட்டி இருக்கும் குஷ்பு, கோயில்கள் கட்டப்பட்ட தமிழ்நாட்டில், சனாதன தர்மத்தை டெங்கு, மலேரியா, கோவிட் உடன் திமுக ஒப்பிட்டுப்பார்க்கிறது என்றும் சனாதன தர்மத்தை ஒழிப்பதாகப் பேசுகிறார்கள் என பதிவிட்டு தமிழ்நாட்டு மக்களை தங்கள் நம்பிக்கைகளையும் வலிமையையும் கைவிடச் சொல்கிறார்கள் என குற்றம்சாட்டி இருக்கிறார்.

சனாதன தர்மம் என்பது ஒரு வாழ்வியல் முறை. இது அனைவரையும் உள்ளடக்கியதே ஆனால் பிளவுபடுத்துவது என திமுக உருவாக்க முயற்சிக்கிறது என குறிப்பிட்ட குஷ்பு, அவர்களை பொறுத்தவரை, அவர்கள் வீட்டு பெண்கள் கோயில்களுக்கு சென்று பூஜை செய்து குங்குமம் மற்றும் விபூதி உடன் உலாவரம்போது அது பரவயில்லை என பகிர்ந்து சனாதன தர்மத்தை பெண்கள் நம்புவதையோ, பழகுவதையோ தடுத்து நிறுத்தும் தைரியம் இவர்களுக்கு இருக்கிறதா என கேள்வி எழுப்பி இருக்கிறார்.