பிரச்சாரத்தை பாதியிலேயே விட்டுவிட்டு காரில் ஏறி சென்ற குஷ்பு! என்ன நடந்தது?
ஏப்ரல் மாதம் 6ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அனைத்து கட்சிகளும் தேர்தல் பிரச்சாரத்தில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு ஒதுக்கப்பட்ட ஆயிரம் விளக்கு தொகுதியில் நடிகை குஷ்பு போட்டி போட்டியிடுகிறார். பாஜகவில் இணைந்த நட்சத்திர பட்டாளத்தில் குஷ்புவுக்கு மட்டுமே இந்தத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
அதனால், எப்படியாவது இந்த தொகுதியில் வென்று விட வேண்டும் என்ற முனைப்புடன் செயல்பட்டு வருகிறார். அதற்காக தீவிரமாக பிரச்சாரங்களில் ஈடுபட்டு செயலாற்றி வந்து கொண்டிருக்கிறார். திமுகவின் கோட்டையாக கருதப்படும் ஆயிரம் விளக்கில் திமுகவின் வேட்பாளர் மருத்துவர் எழிலனை எதிர்த்து களம் காண்கிறார் குஷ்பூ.

குஷ்பு பிரச்சாரத்தில் ஈடுபட்ட போது திடீரென்று ஒரு இஸ்லாமியர் வீட்டுக்குள் சென்று டீ போட்டு கொடுத்தார். இது அங்கிருந்தவர்கள் அனைவரையும் ஆச்சரியம் செய்ய வைத்தது. அதுமட்டுமில்லாமல், பெரியவர்களை பார்த்தால் உடனே அவர்கள் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்குகிறார். இவ்வாறு குஷ்புவின் பிரச்சாரம் ஆயிரம் விளக்கு தொகுதி மக்களை திரும்பி பார்க்க வைத்திருக்கிறது.
பிரச்சாரம் மேற்கொண்டு வந்த போது திடீரென குஷ்பு பாதியில் வீட்டிற்கு கிளம்பியது பரபரப்பை ஏற்படுத்தியது. மாடல் பள்ளி சாலை பகுதியில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் குஷ்பு பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது வெகு நேரம் நடக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. அப்போது அதிமுகவினர் சுதந்திர நகர் பகுதிக்கு செல்ல வேண்டுமென்று கூறினார்கள்.
ஆனால் அதற்கு குஷ்பு எனக்கு டயர்ட்டாக இருக்கிறது என்னால் வெகு தூரம் நடக்க முடியல என்று சொல்லிவிட்டு அங்கிருந்து பாதியிலேயே காரில் ஏறி சென்று விட்டார். இதனால் அதிமுகவினரை அதிருப்தி அடைந்ததாகக் கூறப்படுகிறது.