‘‘நானும் கமல்ஹாசனும் எங்கள் தந்தையின் பெயரை வைத்துக்கொண்டு நடமாடவில்லை’’ : கார்த்திக் சிதம்பரத்தை வம்பிழுக்கும் குஷ்பு

actor politics kamal kushboo chidambaram
By Jon Mar 24, 2021 05:46 PM GMT
Report

அப்பாவின் பெயரை வைத்துக்கொண்டு நானும் கமல்ஹாவனும் நடமாடவில்லை என கார்த்தி சிதம்பரம் தெரிவித்த கருத்துக்கு பதில் கொடுத்துள்ளார் பாஜக வேட்பாளர் குஷ்பு. தமிழக தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. தலைவர்கள் சூறாவளிப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சமூக வலைதளம் வழியாகவும்ஒருவருடைய கருத்துக்கு இன்னொருவர் எதிர்க்கருத்து பதிவிடுவதும் தொடர்கிறது.

அந்தவகையில், கார்த்திக் சிதம்பரம் தனது ட்வீட்டர் பதிவில் ,கமல்ஹாசன், குஷ்பு போன்ற திரையுலகைச் சேர்ந்த பிரபல வேட்பாளர்கள் தவிர்க்க முடியாத அவர்களின் தோல்விக்குப் பிறகு அவரவர் தொகுதிக்குச் செல்லவே மாட்டார்கள். இது மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் ஆகிய கட்சிகளின் வேட்பாளர்கள் அனைவருக்கும் பொருந்தும்"என கார்த்தி சிதம்பரம் தெரிவித்திருந்தார்.

இந்த ட்வீட்களுக்கு பதில் கொடுத்துள்ள ஆயிரம் விளக்குத் தொகுதியின் பாஜக வேட்பாளர் குஷ்பு தனது ட்விட்டர் பதிவில் நண்பரே, நானும் கமல்ஹாசனும் எங்கள் தந்தையின் பெயரை வைத்துக்கொண்டு நடமாடவில்லை. அதை வைத்து நாங்கள் சாதிக்கவில்லை. வாழ்க்கையில் இந்த நிலைக்கு வரவில்லை.

எங்களால் சொந்தமாகக் கடினமாக உழைக்க முடியும். நாங்கள் இரண்டு மடங்கு உழைத்து எங்களை வெற்றி பெறச் செய்யும் மக்களுக்காக அதிகம் உழைப்போம். என தெரிவித்துள்ள குஷ்பு. நானும் கமல்ஹாசனும் சொந்தமாக உழைத்து முன்னேறியவர்கள். எங்களது கடின உழைப்பும், அர்ப்பணிப்பும் திறமையும், நேர்மையும் மட்டுமே எங்களை இவ்வளவு தூரம் அழைத்து வந்திருக்கிறது.

எனவே பொதுவில் உங்கள் பாதுகாப்பின்மை மனப்பான்மையைக் காட்டி உங்கள் தந்தைக்கு இன்னும் அவமானத்தைத் தேடித் தராதீர்கள். மேலும்,தலைவர்கள் என்று சொல்லிக் கொள்பவர்களின் மகன்களை விடத் தானாக முன்னேறிய ஒரு நபருக்கு வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை அதிகமாக இருக்கும் என்கிற காரணத்தினால் நீங்கள் இப்படி உணர்ந்திருக்கலாம்என குஷ்பு தெரிவித்துள்ளார்.