திறந்தவெளி வாகனத்தில் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்ட குஷ்பு: மக்கள் அமோக ஆதரவு

open candidate kushboo Aayiram Vilakku
By Jon Mar 30, 2021 09:32 AM GMT
Report

சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிடும் குஷ்பு திறந்தவெளி வாகனத்தில் சென்று தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். சட்டமன்ற தேர்தலில் இன்னும் சில நாட்களே வர உள்ள நிலையில், அதிமுக கூட்டணியில் சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் திமுக வேட்பாளர் எழிலனை எதிர்த்து குஷ்பு போட்டியிடுகிறார்.

வேட்பாளராக தன்னை அறிவித்த நாளிலிருந்து குஷ்பு தொடர்ந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். காலை முதல் மாலை வரை மக்களை சந்தித்து வாக்கு சேகரித்து வருகிறார். குஷ்புவிற்கு ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள மக்கள் உற்சாக வரவேற்பு அளிக்கிறார்கள்.

திறந்தவெளி வாகனத்தில் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்ட குஷ்பு: மக்கள் அமோக ஆதரவு | Kushboo Hurricane Campaign Open Space Vehicle

பொதுமக்களை அவர்களின் இல்லத்திற்கே சென்று தான் போட்டியிடும் தாமரை சின்னத்தில் வாக்களிக்கும்படி குஷ்பு கேட்டுக் கொண்டு வருகிறார். அந்த வகையில் இன்று கோடம்பாக்கம் பகுதியில் இருக்கக்கூடிய டிரஸ்ட்புரம் 1-வது தெருவில் இருந்து 10 தெரு வரை வீதி வீதியாக திறந்தவெளி வாகனத்தில் சென்ற குஷ்பு தாமரை சின்னத்தில் வாக்களிக்கும்படி கேட்டுக் கொண்டார்.

குஷ்புவுக்கு ஆதரவாக சென்ற கட்சி நிர்வாகிகள் துண்டு பிரசுரங்களை விநியோகித்தனர்.