பாஜகவில் குஷியில் குஷ்பூ.. அப்செட்டில் கவுதமி ஏன் தெரியுமா?
அதிமுக கூட்டணியில் உள்ள பா.ஜ.க சார்பில் போட்டியிட நடிகை குஷ்புவிற்கு சீட் கொடுத்து கவுதமிக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டிருக்கிறது. ராஜபாளையத்தில் கவுதமியும், சேப்பாக்கத்தில் குஷ்புவும் களமிறங்க விரும்பினார்கள். பா.ஜ.கா தலைமையும் அவர்களை பொறுப்பாளர்களாக நியமித்தது. அந்தந்த ஊர்களுக்கே அனுப்பியது.
இருவரும் நகர்வலம் துவங்கியதால், பா.ஜ.க வட்டாரமே களைகட்டியது. திடீர் திருப்பமாக, சேப்பாக்கம் தொகுதி பா.ம.க.வுக்கு ஒதுக்கப்பட்டது. 'சிவகாசி வேண்டாம்' என ராஜபாளையம் வந்து விட்டார் ராஜேந்திர பாலாஜி.

'அப்செட்' ஆனாலும், இரு நடிகைகளும் காட்டிக் கொள்ளாமல் இருந்தனர். 'கட்சி முடிவை ஏற்கிறேன்' என்றார் குஷ்பு. 'ராஜபாளையம் மக்கள் காட்டிய அன்புக்கு தலைவணங்குகிறேன். அவர்களுடன் உறவு நிலைத்திருக்கும்' என்றார் கவுதமி. இதற்கிடையில் குஷ்புக்கு ஆயிரம் விளக்கு தொகுதி கிடைத்தது. இதனால் குஷ்பு குஷியாகி விட்டார்.
ஆனால், கவுதமியின் விரக்தி அவரது வாழ்த்தில் தெரிகிறது. 'அனைத்து, பா.ஜ.க வேட்பாளர்களும் வெற்றி பெற, என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!' என்று தெரிவித்துள்ளார்.