நான் என்ன உங்க ஈஸி டார்கெட்டா? கொந்தளித்த குஷ்பு
கு.க. செல்வம் வாய்ப்பை நான் எதற்கு தட்டி பறிக்க போறேன். நான் யாருடைய வாய்ப்பையும் தட்டி பறிக்கவில்லை என்று நடிகையும் பாஜக வேட்பாளருமான குஷ்பு தெரிவித்திருக்கிறார். தமிழக சட்டமன்ற பொதுத் தேர்தல் கிட்ட நெருங்குவதால் அனைத்து கட்சிகளும் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்நிலையில் ஆயிரம் விளக்கு தொகுதி பாஜக வேட்பாளர் குஷ்பு பேசியதாவது - ஆயிரம் விளக்கு தொகுதியில் கு.க. செல்வத்தின் வாய்ப்பை நான் எதற்கு தட்டி பறிக்க போகிறேன். நான் அவருடைய வாய்ப்பை தட்டி பறிக்கவில்லை. நான் டெல்லி வரை சென்று வாய்ப்பை பெறக்கூடியவள் என்றால், நான் இங்கு இருக்க மாட்டேன்.
இந்நேரம் டெல்லியில் தான் இருந்திருப்பேன். எனக்கு சீட் கொடுப்பார்கள் என்று எனக்கே தெரியாது. இதுவே வேறு யாருக்காவது சீட்டு கொடுத்திருந்தால் நீங்கள் டெல்லி சென்று சீட்டு வாங்கி வந்தீர்களா என்று கேட்பீர்களா? எனக்கு மட்டும் ஏன் இதுமாதிரி பேச்சுக்கள் வருகிறது என்று தெரியவில்லை. ஒரு பெண் என்பதால் நான் ஈஸி டார்கெட்டாக இருக்கிறேன் என்று நினைக்கிறேன்.

கமல் அதிகமாக திமுகவை விமர்சனம் செய்து வருகிறார். தவறு எங்கு நடக்கிறதோ அங்கு இருப்பவர்களை தான் விமர்சிக்க முடியும்? கமல் பாஜகவின் பி டீம் என்று சொல்வது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது.
தவறை மறைக்க திமுக இதுபோன்ற குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறது.
ஒரு மதத்தை தாக்கி பேச வேண்டும் என்பது இல்லை. மதம் என்பது அவரவரின் தனிப்பட்ட கருத்து. நம்பிக்கை இருக்கிறதோ இல்லையோ ஒரு மதத்தை தாக்கி கொச்சைப்படுத்தி பேசக்கூடாது என்று பேசினார்.