சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடுகிறாரா குஷ்பு? அவர் அளித்த பதில்

Kushboo
By Fathima Feb 22, 2026 11:28 AM GMT
Report

வருகிற சட்டப்பேரவை தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடுவீர்களா என்ற கேள்விக்கு குஷ்பு பதிலளித்துள்ளார்.

இன்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த போது, சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடுவீர்களா? என கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு, ஒவ்வொரு முறை இந்த கேள்வி வருகிறது, யார் போட்டியிடுகிறார்கள் என்பது முக்கியமில்லை, எந்த இடத்தில் நின்று ஜெயிக்கிறோம் என்பது தான் முக்கியம்.

சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடுகிறாரா குஷ்பு? அவர் அளித்த பதில் | Kushboo Constitute In Tn Election 2026

தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை முடிந்த பின்னரே கட்சியின் மூத்த தலைவர்கள் முடிவெடுப்பார்கள் என தெரிவித்தார்.

மேலும் திமுக- தேமுதிக கூட்டணி குறித்த கேள்விக்கு, யார் யாருடனும் வேண்டுமானாலும் கூட்டணி வைக்கலாம், “அரசியலை பொறுத்தவரையில் நிரந்தர நண்பர், எதிரி என யாருமே கிடையாது”.

விஜயகாந்த் அவர்கள் உயிருடன் இருந்திருந்தால் இது நடந்திருக்காது. நிச்சயமாக நடந்திருக்காது என தெரிவித்தார்.

சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடுகிறாரா குஷ்பு? அவர் அளித்த பதில் | Kushboo Constitute In Tn Election 2026