பாஜக சொல்லும் இடத்தில் போட்டியிடுவேன்: குஷ்பு
சட்டப்பேரவை தேர்தலில் பாஜக தலைமை உத்தரவிடும் தொகுதியில் போட்டியிடுவேன் என தெரிவித்துள்ளார் நடிகை குஷ்பு. எதிர்வரும் சட்டப்பேரவை தேர்தலில் சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட முடிவு செய்த பாஜக, அதற்கான தேர்தல் பொறுப்பாளராக குஷ்புவை நியமித்தது. அவரும் தினமும் வந்து தொகுதி மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்து அயராது உழைத்து வந்தார்.
ஆனால் அந்த தொகுதி அதிமுக-வுக்கு என ஒதுக்கப்பட்டவுடன், பாஜகவினர் சற்று அதிர்ச்சியடைந்தனர். தொடர்ந்து தனக்கு கொடுக்கப்பட்ட வேலையை சரிவர செய்து வருவதாகவும், இதில் வருத்தம் ஏதுமில்லை எனவும் குஷ்பு தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் பாஜக தலைமை சொல்லும் இடத்தில் போட்டியிடத் தயார் என குஷ்பு தெரிவித்துள்ளார், மேலும் பிரசாரத்துக்காக அசாம், மேற்கு வங்கம் கூட செல்லப்போவதாகவும் தெரிவித்துள்ளார்.