தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக குஷ்பூ நியமனம் - சீமான் வாழ்த்து!
தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக நியமிக்கப்பட்டிருக்கும் குஷ்புவுக்கு நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பாஜக பிரமுகர் குஷ்பூ நியமனம்
இன்று தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினராக குஷ்பூ நியமிக்கப்பட்டிருக்கிறார்.
பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினராக பதவியில் இருந்து வருபவர் நடிகை குஷ்பூ. தற்போது, பாஜக பிரமுகரான குஷ்பூ தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.
குஷ்பூ தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினராக நியமிக்கப்பட்டதற்கு பாஜக பிரமுகர்கள் உட்பட பலர் குஷ்பூவிற்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
நடிகையும், பாஜக பிரமுகரான குஷ்பூ பாஜகவில் இணைவதற்கு முன் காங்கிரஸ் கட்சியில் அங்கம் வகித்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சீமான் வாழ்த்து
தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக நியமிக்கப்பட்டிருக்கும் குஷ்புவுக்கு நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் பேசுகையில்,
தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக நியமிக்கப்பட்டிருக்கிற பாஜக தேசிய குழு உறுப்பினர் குஷ்பூ அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். எதையும் நேர்த்தியாகத் திறம்படச் செய்வீர்கள் என்பதை அறிவேன். அதைப் போலவே இப்பணியையும் மேற்கொள்வீர்கள் என்று நம்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.