டெல்லியில் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக பதவியேற்றார் குஷ்பூ...!
டெல்லியில் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக குஷ்பூ பதவியேற்றார்.
பாஜக பிரமுகர் குஷ்பூ நியமனம்
நேற்று தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினராக குஷ்பூ நியமிக்கப்பட்டார்.
பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினராக பதவியில் இருந்து வந்த நடிகை குஷ்பூ. தற்போது, பாஜக பிரமுகரான குஷ்பூ தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.
குஷ்பூ தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினராக நியமிக்கப்பட்டதற்கு பாஜக பிரமுகர்கள் உட்பட பலர் குஷ்பூவிற்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். நடிகையும், பாஜக பிரமுகரான குஷ்பூ பாஜகவில் இணைவதற்கு முன் காங்கிரஸ் கட்சியில் அங்கம் வகித்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

டெல்லியில் பதவியேற்றார் குஷ்பூ
இந்நிலையில், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக பாஜக செயற்குழு உறுப்பினர் குஷ்பூ டெல்லியல் பதவி ஏற்றுக்கொண்டார்.
இதன் பிறகு இவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழ்நாட்டு பெண்களின் பிரச்சினைகளில் அதிக கவனம் செலுத்தப்போகிறேன் என்றார்.