தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினராக குஷ்பூ நியமனம் - குவியும் வாழ்த்துக்கள்...!
நடிகையும், பாஜக பிரமுகருமான குஷ்பூ தற்போது தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வாக்குப்பதிவு
இன்று ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று தங்கள் ஜனநாயக கடமைக்காக வாக்களித்து வருகிறார்கள்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் இன்று காலை 9 மணி வரை 10.10 சதவிகிதம் வாக்குகள் பதிவாகியிருந்தன. தற்போது 11 மணி நிலவரப்படி 27.89% வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது.
பாஜக பிரமுகர் குஷ்பூ நியமனம்
இந்நிலையில், தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினராக குஷ்பூ நியமிக்கப்பட்டிருக்கிறார்.
பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினராக பதவியில் இருந்து வருபவர் நடிகை குஷ்பூ. தற்போது, பாஜக பிரமுகரான குஷ்பூ தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.
குஷ்பூ தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினராக நியமிக்கப்பட்டதற்கு பாஜக பிரமுகர்கள் உட்பட பலர் குஷ்பூவிற்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
நடிகையும், பாஜக பிரமுகரான குஷ்பூ பாஜகவில் இணைவதற்கு முன் காங்கிரஸ் கட்சியில் அங்கம் வகித்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.