பாஜகவிற்கு ஆதரவாக...இனி தேர்தல் பிரச்சாரம் இல்லை குஷ்பு திடீர் முடிவு - அதிர்ச்சி பின்னணி..?

Tamil nadu BJP Kushboo Lok Sabha Election 2024
By Karthick Apr 07, 2024 08:02 AM GMT
Report

தமிழ்நாட்டில் தேர்தல் நெருங்கும் சூழலில், பிரச்சார களம் சூடுபிடித்துள்ளது.

தமிழ்நாடு தேர்தல்

நாட்டில் முதல் மக்களவை தேர்தலாக தமிழகத்தில் வரும் 19-ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர், பாஜக கூட்டணி என 4 முனை போட்டி மாநிலத்தில் நிலவும் நிலவுகிறது.

kushboo-announces-cant-campaign-for-bjp

வேட்பாளர்கள், கட்சி தலைவர்கள், நட்சத்திர பேச்சாளர்கள் என பலரும் தீவிர பிரச்சரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். திராவிட கட்சிகள் இல்லாமல் தேர்தலை சந்திக்கும் பாஜக ஆழமாக காலூன்ற மும்முரமாக செய்லபட்டு வருகின்றது.

விலகிய குஷ்பு

பாஜகவிற்கு ஆதரவாக நடிகையும், பாஜகவின் தேசிய செயற்குழு கமிட்டி உறுப்பினரான குஷ்பு பிரச்சாரம் மேற்கொண்டு வந்தார். ஆனால், சற்று முன்பு தனது தேர்தல் பிரச்சாரத்தை நிறுத்தி கொள்வதாக குஷ்பு கட்சியின் தேசிய தலைமைக்கு கடிதம் எழுதியுள்ளார்.

kushboo-announces-cant-campaign-for-bjp]

அந்த கடிதத்தில், நன்றியோடும், சோகத்துடனும் இந்த கடிதம் மூலம் உங்களை அணுகிறேன். வாழ்க்கை என்பது கணிக்க முடியாதது. நாம் நன்றாக இருப்பதாக உணரும்போது சில பிரச்சனைகள் வருகிறது. நானும் அத்தகைய நிலையை எட்டியுள்ளேன். 2019ல் டெல்லியில் துரதிர்ஷ்டவசமாக நடந்த விபத்தில் எனக்கு வால் எலும்பு முறிவு ஏற்பட்டது.

இந்த காயம் கடந்த ஐந்து ஆண்டுகளாக என்னைத் துன்புறுத்துகிறது. தொடர்ந்து சிகிச்சை எடுத்து கொண்டாலும் குணமடையாத நிலையில் இருக்கிறேன். இத்தகைய சூழலில் பிரசாரம் செய்ய வேண்டாம் என்று எனது மருத்துவக் குழு கண்டிப்புடன் அறிவுறுத்தியது. பிரசாரம் செய்தால் உடல்நிலையை இன்னும் மோசமாகும் எனவும் எச்சரித்தனர்.

kushboo-announces-cant-campaign-for-bjp

ஆனால் அர்ப்பணிப்பு உணர்வுள்ள ஒரு பாஜகவின் தொண்டராகவும், பிரதமர் மோடியை பின்பற்றும் நபராகவும் கட்சியின் போர்வீரர் என்ற முறையில் டாக்டர்கள் அறிவுரைக்கு எதிராக வலி மற்றும் வேதனைகள் இருந்தாலும் என்னால் முடிந்தவரை பிரசாரம் செய்தேன். ஆனால் இப்போது நிலைமை மோசமாகிவிட்டது.

பலகட்ட ஆலோசனைகளை பெற்றேன். அப்போது பிரச்சனையை சரிசெய்ய தேவையான நடவடிக்கையை உடனடியாக மேற்கொள்ள டாக்டர்கள் அறிவுறுத்தினர். இது ஒரு பெரிய அல்லது உயிருக்கு ஆபத்தான செயல்முறை அல்ல. இருப்பினும் கூட தாமதம் செய்ய முடியாத நிலை உள்ளது. ஏனென்றால் தாமதம் செய்வது எனது எதிர்கால நல்வாழ்வுக்கு பிரச்சனையை ஏற்படுத்தலாம். மேலும் தற்போதைய வழக்கமான செயல்முறைகளை நான் குறைத்து கொண்டேன்.

kushboo-announces-cant-campaign-for-bjp

பிரசாரம் என்பது நீண்ட பயணங்கள், நீண்டநேரம் அமர்ந்து இருப்பது உள்ளிட்டவற்றை கொண்டாக இருக்கும். இந்த 2 விஷயங்களையும் தேர்தல் பிரசாரத்தில் தவிர்க்க முடியாது. இதனால் தற்போதைய தேர்தல் பிரசாரத்தில் என்னால் பங்கேற்க முடியாது என்பதை கணத்த இதயத்துடன் தெரிவித்து கொள்கிறேன்.

அதேவளையில் முக்கியமான இந்த நேரத்தில் கட்சிக்கு என்னால் பங்களிக்க செய்ய முடியவில்லையே என்ற ஆழ்ந்த மனவருத்தம் உள்ளது. இருப்பினும் எனது வலைதள பக்கங்கள் மூலம் பாஜகவின் கொள்கை, செயல்திட்டங்களை மக்களிடம் எடுத்து செல்வதன் மூலம் தொடர்ந்து பிரசாரத்தின் ஒருபகுதியாக நான் இருப்பேன்.

உங்களின் ஊக்கம் வலுவாக நான் திரும்பி வருவதற்கான முயற்சிக்கு வலு சேர்க்கிறது. நான் குணமடைந்து விரைவில் திரும்பி வருவேன். மேலும் நம் பிரதமர் தொடர்ந்து 3வது முறையாக பதவியேற்பதையும், நான் எங்கிருந்தாலும் சத்தமாக ஆரவாரம் செய்வதையும் காண ஆவலுடன் காத்திருக்கிறேன்'' என தெரிவித்துள்ளார்.