கருத்து கணிப்பை நினைத்து பயப்படாதீங்க : ஆறுதல் கூறும் குஷ்பு
கருத்துக்கணிப்பு குறித்து கவலை பட வேண்டாம் என ஆயிரம் விளக்கு தொகுதி பாஜக வேட்பாளர் குஷ்பு தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு தனியார் நிறுவனங்கள் வெளியிட்ட தேர்தல் கருத்து கணிப்பில் ,திமுக கூட்டணியே வெற்றிபெறும் என முடிவு வெளியாகியது. இது அதிமுக தொண்டர்கள் மத்தியிலும் பாஜக தொண்டர்கள் மத்தியிலும் கலக்கத்தை ஏற்படுத்திது.
இந்நிலையில் கருத்துக்கணிப்பு முடிவுகள் குறித்து நடிகையும் ஆயிரம் விளக்கு தொகுதி பாஜக வேட்பாளருமான குஷ்பு கூறும் போது. 2011 ஆம் ஆண்டு தமிழகத்தில் ஜெயலலிதா ஆட்சி அமையாது என கருத்து கணிப்பு வெளியானது.
ஆனால் ஜெயலலிதா அமோக வெற்றிபெற்று ஆட்சியமைத்தார். அதேபோல் 2019 இல் வெளியான கருத்துக்கணிப்பில் மோடி மத்தியில் ஆட்சியை பிடிக்கமாட்டார்கள் என்று கருத்துக்கணிப்பு வெளியானது.

ஆனால் மோடி மீண்டும் பிரதமரானார். ஆகவே இந்த கருத்துக்கணிப்பையெல்லாம் பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என கூறிய குஷ்பு.
ஆயிரம் விளக்கு தொகுதிக்கு என்னை ஆதரித்து பிரச்சாரம் செய்வதற்காக மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி, அமித்ஷா, முதல்வர் பழனிசாமி ஆகியோர் விரைவில் வருவார்கள் என கூறினார்.