இந்தியாவுக்கு எதிரான தொடர்: காயத்தால் இலங்கையின் முக்கிய வீரர் விலகல்
இந்தியாவுக்கு எதிரான ஒரு நாள் மற்றும் 20 ஓவர் தொடருக்கான இலங்கை கிரிக்கெட் அணி நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில் முக்கிய வீரர் விலகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா-இலங்கை அணிகள் இடையே 3 ஒரு நாள் மற்றும் மூன்று 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கொழும்பில் நடைபெறுகிறது. இதில் முதல் போட்டி ஜூலை 18 ஆம் தேதி நடக்கிறது.
இதனிடையே இந்த தொடருக்கான இலங்கை அணி வீரர்கள் பட்டியல் அந்நாட்டு விளையாட்டுத்துறை அமைச்சர் நமல் ராஜபக்சேவின் ஒப்புதலுக்கு பிறகு வெளியிடப்பட்டது.
அதன்படி இலங்கை அணியின் புதிய கேப்டனாக தசுன் ஷனகா நியமிக்கப்பட்டுள்ளார். இது கடந்த 4 ஆண்டுகளில் நியமனம் செய்யப்பட்ட 10-வது கேப்டனாகும்.
இந்நிலையில் தோள்பட்டை காயம் காரணமாக இங்கிலாந்து தொடரில் கேப்டனாக இருந்த குசல் பெரேரா இந்த தொடரில் இருந்து விலகினார். அதேபோல் வேகப்பந்து வீச்சாளர் பினுரா பெர்னாண்டோவும் காயம் காரணமாக அணியில் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது