இனி குறவன் - குறத்தி ஆட்டம் இல்லை - அரசு அதிரடி!

Government of Tamil Nadu
By Sumathi Mar 13, 2023 04:09 AM GMT
Report

கோவில் திருவிழாக்களில் ஆடப்படும் குறவன், குறத்தி ஆட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

குறவன் - குறத்தி 

கோவில் நிகழ்ச்சிகளின்போது குறவன் குறத்தி என்ற பெயரில் ஆபாச நடனம் ஆடுவதாக புகார் எழுந்தது. இந்நிலையில் தமிழகத்தில் கோயில் திருவிழாக்களில் நடத்தப்படும் குறவன், குறத்தி ஆட்டத்திற்கு தடை விதித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இனி குறவன் - குறத்தி ஆட்டம் இல்லை - அரசு அதிரடி! | Kuravan And Kurathi Dance Banned Tamilnadu Govt

அதில், குறவன், குறத்தில் ஆட்டம் நாளடைவில் ஆடல், பாடல் நிகழ்ச்சிகளில் சேர்க்கப்பட்டு ஆபாசமாக ஆடப்படுவதாகவும், ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை அவமதிப்பதாகவும் அமைந்துள்ளதாக அறியவந்ததை அடுத்து நடவடிக்கை எடுத்திருப்பதாக தெரிவித்துள்ளது.

தடை

தமிழ்நாடு சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை சார்பில் மார்ச் 10-ம் தேதி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

முன்னதாக சில கோவில் திருவிழாக்களின்போது ஆடல் பாடல் நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.