பாசமாக வளர்த்த நாய் இறந்ததால் சோகம் : செல்லப்பிராணிக்காக நபர் செய்த நெகிழ்சி செயல் என்ன தெரியுமா?

tombstoneforpet gunturdog
By Swetha Subash Mar 08, 2022 07:36 AM GMT
Swetha Subash

Swetha Subash

in சமூகம்
Report

ஆந்திர மாநிலத்தில் இறந்த செல்லப்பிராணிக்கு நினைவிடம் கட்டிய சம்பவம் நெகிழ்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் குண்டூரை சேர்ந்த சீனிவாஸ் என்பவர் கடந்த 2014-ம் ஆண்டு நாய்க்குட்டி ஒன்றை எடுத்து வளர்த்து வந்தார்.

அந்த நாய்க்குட்டிக்கு தும்பு என்று பெயரிட்டு செல்லமாக வளர்த்து வந்துள்ளார் அவர்.

இந்நிலையில் கடந்த மாதம் 14-ந் தேதி திடீரென அந்த நாய் இறந்து விட்டது.

பாசமாக வளர்த்த நாய் இறந்ததால் சோகம் : செல்லப்பிராணிக்காக நபர் செய்த நெகிழ்சி செயல் என்ன தெரியுமா? | Kuntur Man Builds Tomstone For Pet Dog Thumbu

4 ஆண்டுகளாக பாசத்துடன் வளர்த்த நாய் இறந்ததை ஏற்றுக்கொள்ள முடியாத சீனிவாஸ் மிகுந்த வேதனை அடைந்தார்.

மேலும் அவர் அந்த நாயின் உடலை தனது சொந்த ஊரான குண்டூருக்கு எடுத்து சென்று அடக்கம் செய்து அந்த இடத்திலேயே தும்புவிற்கு நினைவிடம் ஒன்றை கட்டியுள்ளார்.

அந்த நினைவிடத்தில், தும்பு நாயின் உருவப்படம் பொறித்து வைக்கப்பட்டுள்ளது.

பாசமாக வளர்த்த நாய் இறந்ததால் சோகம் : செல்லப்பிராணிக்காக நபர் செய்த நெகிழ்சி செயல் என்ன தெரியுமா? | Kuntur Man Builds Tomstone For Pet Dog Thumbu

அதுமட்டுமில்லாமல் சீனிவாஸ் தும்பு போன்றே மற்றொரு நாயை தேர்வு செய்து வளர்க்க முடிவு செய்து,

தெலுங்கானா மாநில பிராணிகள் தத்தெடுப்பு சங்கத்தின் உதவியுடன் வேறொரு நாய்க் குட்டியை தேர்ந்தெடுது அதற்கு ‘தும்பு ஜூனியர்’ என்று பெயர் சூட்டியுள்ளார். 

இறந்த செல்லப்பிராணி மீது வைத்துள்ள அவரின் இந்த பாசம் காண்போரை நெகிழ்சி அடையச்செய்துள்ளது