மீன் விற்கும் குங்பூ போட்டியில் 3 முறை தங்கம் வென்ற வீராங்கனை - ரசிகர்கள் அதிர்ச்சி

By Petchi Avudaiappan May 19, 2022 08:39 PM GMT
Report

சர்வதேச மற்றும் மாநில அளவில் நடந்த குங்பூ போட்டிகளில் பதக்கங்களை வென்ற அங்கோம்பினா தேவியின் நிலைமை ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

மணிப்பூர் மாநிலத்தை சேர்ந்த  குங்பூ வீராங்கனை அங்கோம்பினா தேவி என்பவர் சர்வதேச மற்றும் தேசிய அளவில் நடந்த குங்பூ போட்டிகளில் பல பதக்கங்களை வென்றவர் ஆவார். பல3 குழந்தைகளுக்கு தாயான இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு  கணவர் மறைவிற்கு பிறகு , அவரது பெற்றோர் வீட்டிற்கு சென்றுள்ளார். 

ஆனால் அங்கு வறுமை துரத்தவே மீன் விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டார். குங்பூ மீது அங்கோம்பினா தேவி கொண்ட ஆர்வம் காரணமாக முறையாக பயற்சி பெற்று சர்வதேச மற்றும் மாநில அளவில் நடந்த போட்டிகளில் தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்களை பெற்றிருந்தார். இப்படியான அவரின் நிலையைக் கண்டு ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். 

இதுதொடர்பாக பேட்டியளித்துள்ள அங்கோம்பினா தேவி குங்பூ போட்டிகளில் பங்கேற்பதற்கு அரசிடம் இருந்து எந்தவிதமான உதவியும் தனக்கு  கிடைக்கவில்லை என்றும், போட்டிகளில் பதக்கங்கள் பெற்ற பிறகும் எந்த விதமான ஊக்கத்தொகையும் கிடைக்கவில்லை என்றும் ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார்.