கள்ளக்குறிச்சி கலவரத்தில் மாடு திருடிய 4 பேர் மீது பாய்ந்தது குண்டாஸ்
கள்ளக்குறிச்சியில் மாணவி ஸ்ரீமதி மரணம் தொடர்பாக நடந்த போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையின் போது மாடு திருடிய 4 பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது.
பாய்ந்தது குண்டர் சட்டம்
கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் தனியார் பள்ளியில் கடந்த மாதம் 17-ம் தேதி மாணவி ஸ்ரீமதி மரணம் தொடர்பாக நடந்த போராட்டத்தில் கலவரம் வெடித்தது.
இந்த கலவரத்தின் போது பள்ளியில் இருந்த பொருட்கள் மற்றும் போலீஸ் வாகனங்கள் தீயிட்டு கொளுத்தப்பட்டன.

இது தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்தி கைது நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி கலவரம் தொடர்பாக இதுவரை 350க்கும் மேற்பட்டவர்களை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்த நிலையில் கலவரத்தின் போது மாடு திருடியதாகவும், காவல்துறையினர் வாகனத்திற்கு தீ வைத்ததாக கைது செய்யப்பட்ட 4 பேரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.