காற்றில் பறந்த கொரோனா விதிமுறைகள் : கும்பமேளாவில் நீராடிய 100-பேருக்கு கொரோனா
கும்பமேளா நிகழ்வில் பங்கேற்ற 100-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
உத்தரகண்ட் மாநிலம், ஹரித்வாரில்,12 ஆண்டுக்கு ஒருமுறை கும்பமேளா நிகழ்ச்சி நடைபெறும். இந்த நிகழ்வு கடந்த 1-ம் தேதி தொடங்கியது. இந்தியாவில் கொரோனா 2-வது அலை தீவிரமாக பரவி வருவதால், இந்த நிகழ்வை ரத்து செய்யுமாறு பல தரப்பினரும் கோரிக்கை வைத்தனர்.
ஆனால், கட்டுப்பாடுகளுடன் இந்த நிகழ்வு நடைபெறும் என்று உத்தரகாண்ட் அரசு தெரிவித்தது. அந்த வகையில் கும்பமேளா முக்கிய நிகழ்வான 2-ம் நீராடல் நேற்று நடைபெற்றது. இதனையடுத்து கங்கையில் நீராட, அங்கு 28 லட்சம் மக்கள் ஹரித்துவாரில் குவிந்தனர்.
அரசு கூறிய விதிகளை கடைபிடிக்காமல், ஒரே நேரத்தில் லட்சக்கணக்கான மக்கள் நீராடினர். இந்நிலையில், கடந்த 2 நாட்களில், 18 ஆயிரம் பேருக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில், 102 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Kumbh Mela 2021: 102 devotees test COVID-19 positive in Haridwar after ‘shahi snan’, says report.https://t.co/TkovjG0LOf
— TIMES NOW (@TimesNow) April 13, 2021