கங்கை நீரில் மனித,விலங்கு கழிவு..புனித நீராடும் தண்ணீர் குளிப்பதற்கு உகந்தது இல்லை -அதிர்ச்சி தகவல் !
கங்கை நீரில் மனித, விலங்கு கழிவு அதிகம் கலந்து இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
மகா கும்பமேளா
உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை அலகாபாத் திரிவேணி சங்கமத்தில் நடைபெறும் கும்பமேளா முழு (பூர்ண) கும்பமேளா எனப்படும். மற்ற இடங்களில் நடைபெறும் கும்பமேளாவை விட இது புகழ்பெற்றது.
12 வது முழு (பூர்ண) கும்பமேளா அதாவது 144 ( 12 X 12 ) ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் கும்பமேளா மகா கும்பமேளா எனப்படும். மகா கும்பமேளாவே உலகில் அதிக அளவு மக்கள் ஒன்று கூடும் திருவிழாவாகும்.
இந்த விழாகடந்த மாதம் 13 ஆம் தேதி தொடங்கிய இந்த நிகழ்ச்சி வரும் 26 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.இதுவரை கங்கை , யமுனை மற்றும் சரஸ்வதி இனையும் திரிவேணி சங்கமத்தில் 50 கோடிக்கும் அதிகமானோர் புனித நீராடியுள்ளனர்.
மனித, விலங்கு கழிவு?
இந்த நிலையில், கங்கை மற்றும் யமுனை நதியில் கழிவுநீர் கலக்கப்படுவதைத் தடுக்கக் கோரிய மனுவைத் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் விசாரணை மேற்கொண்டனர்.அதில், பிரயாக்ராஜில் கங்கை நீரில் மனிதர்கள் மற்றும் விலங்குகளின் கழிவுகளிலிருந்து வரும் கிருமிகள் அதிகளவில் இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
மேலும்,திரிவேணி சங்கமத்தில் பக்தர்கள் புனித நீராடும் தண்ணீர் குளிப்பதற்கு உகந்ததாக இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.