நான் அழகாக இல்லை..தற்கொலை செய்து கொண்ட 12ஆம் வகுப்பு மாணவன்..
கும்பகோணம் அருகே,அழகாக இல்லை என்ற தாழ்வு மனப்பான்மையில் 12ஆம் வகுப்பு மாணவன் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டான் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள பணகுடம் பகுதியை சேர்ந்த சங்கர் என்பவரின் மகன் பூவேந்தன். இவர் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், தான் அழகாக இல்லையோ? என்ற தாழ்வு மனப்பான்மை பூவேந்தனிடம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்த தனது நண்பர்களிடம் பூவேந்தன், பகிர்ந்து வேதனைப்பட்டதாக தெரிகிறது.
இவ்வாறு மன அழுத்தத்தில் இருந்து வந்த பூவேந்தன், இன்று காலை பணகுடம் சுடுகாட்டில் உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இது அந்த கிராம மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், மாணவரின் தற்கொலைக்கான காரணம் குறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.