கல்லூரி கழிவறையில் பிறந்த குழந்தை - குப்பையில் வீசி விட்டு வகுப்புக்கு வந்த மாணவி
கல்லூரி மாணவி கழிவறையில் குழந்தை பெற்று அதை குப்பை தொட்டியில் வீசியுள்ளார்.
வயிறு வலி
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம், அரசு மகளிர் கல்லூரியில் 20 வயதுடைய மாணவி ஒருவர், 2ஆம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்த மாணவியின் வயிறு கர்ப்பிணி போல் இருப்பதை பார்த்த சக மாணவிகள் அது குறித்து கேள்வி எழுப்பிய போது, வயிற்றில் பிரச்சினை என கூறியுள்ளார்.
திடீரென தனக்கு வயிறு வலிப்பதாக கூறி கழிவறைக்கு சென்று மாணவி, நீண்ட நேரம் கழித்து உடல் சோர்வுடன் வகுப்பறைக்கு வந்துள்ளார். அவரின் ஆடையில் இரத்தக்கறைகள் இருந்ததை பார்த்து சக மாணவி கேட்ட போது, தனக்கு மாதவிடாய் என கூறிய நிலையில், சிறிது நேரத்தில் மயக்கமடைந்துள்ளார்.
கழிவறையில் குழந்தை
மாணவிகள் உடனடியாக கல்லூரி பேராசிரியைக்கு தகவல் அளித்து விட்டு, மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். மருத்துவர்கள் மாணவியை பரிசோதித்ததில், அவருக்கு குழந்தை பிறந்திருப்பது தெரிய வந்தது.
இதை கேட்டு அதிர்ச்சியடைந்த கல்லூரி நிர்வாகம், இது குறித்து ஆடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கும் தகவல் அளித்துள்ளனர். காவல்துறையினர் மாணவியிடம் விசாரணை நடத்திய போது, தனது உறவினர் ஒருவருடன் நெருங்கி பழகியதால் கர்ப்பமடைந்துள்ளார்.
கழிவறையில் பிறந்த குழந்தையை குப்பை தொட்டியில் போட்டு விட்டு அதன் மூலம் குப்பையை போட்டு மூடியுள்ளார். யூடியூப் பார்த்து தொப்புள் கொடியை அறுத்ததாக தெரிவித்துள்ளார். குப்பை தொட்டியில் காயத்துடன் இருந்த குழந்தை மீட்கப்பட்டு, குழந்தைக்கும் மாணவிக்கும் மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.