குமரி மலை கிராம பழங்குடி மக்கள் படகில் வந்து வாக்களித்தனர்

people village vote kumari malai
By Jon Apr 07, 2021 04:50 PM GMT
Report

மரி மலைகிராமங்களில் இருந்து ஜனநாயக கடமையாற்ற படகில் வந்து வாக்களித்த பழங்குடி இன மக்கள். குமரி மேற்கு மாவட்டத்தில் உள்ள மலை கிராமங்களில் ஏராளமான பழங்குடியின மக்கள் வசித்து வருகிறார்கள்.பேச்சிப்பாறை மலை பகுதியில் விளமலை, முடவன் பெற்றா, தச்சமலை, புன்ன முட்டதேரி, களப்பாறா, நடனம்பொற்றா, மறாமலை, தோட்டமலை பகுதிகள் உள்ளன.

இங்கு 800-க்கும் மேற்பட்ட பழங்குடியின வாக்காளர்கள் உள்ளனர்.இவர்களுக்கான வாக்கு சாவடி பேச்சிப்பாறையில் உள்ள அரசு ஆதிதிராவிடர் உண்டு உறைவிட மேல் நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்தது. இவர்கள் வாக்களிக்க பேச்சிப்பாறை அணையை கடந்து வர வேண்டும். இதற்காக அவர்கள் படகில் 15 நிமிடம் பயணம் செய்து பேச்சிப்பாறை வாக்கு சாவடிக்கு சென்றனர். படகுத்துறைக்கும், வாக்குசாவடிக்கும் அரை கிலோ மீட்டர் தூரம் உள்ளது.ஜனநாயக கடமையாற்ற இவர்கள் படகில் பயணம் செய்தும், நடந்தும் வ

ந்து வாக்குகளை பதிவு செய்தனர். உள்ளாட்சி தேர்தலில் இவர்கள் வசித்த பகுதிகளிலேயே வாக்கு சாவடி அமைக்கப்பட்டிருந்தது. இப்போது பேச்சிப்பாறையில் அமைக்கப்பட்டதால் அவர்கள் படகில் வந்து வாக்களிக்க வேண்டியது இருந்தது.


Gallery