குமரி அருகே நூதன முறையில் 18 கோடி கொள்ளையடித்த இருவர் கைது
குமரி அருகே நூதன முறையில் 18 கோடி கொள்ளையடித்த இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
குமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே பலரிடம் ஹவாலா பணம் வழங்குவதாக கூறி நூதன முறையில் 18 கோடி ரூபாய் மோசடி செய்த கும்பலை சேர்ந்த இருவரை பொறி வைத்து பிடித்த தனிப் பிரிவு போலீசார் மற்றும் மார்த்தாண்டம் காவல்த்துறையினர்.
பிடித்த இருவரிடம் போலீசார் விசாரணை. குமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே கஞ்சிக்குழி பகுதியை சேர்ந்த ஜபமணி என்பவரிடமும் அல்லாமல் இரண்டு பேரிடமும் ஹவாலா பணம் தருவதாக கூறி 18-லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக கூறி ஜபமணி என்பவர் கொடுத்த தகவலின் பேரில் தக்கலை தனிப் பிரிவு போலீசார் இந்த நூதன கொள்ளையில் ஈடுபட்ட கும்பலை தேடி வந்தனர்.
இந்த நிலையில் ஜபமணி என்பவரை வைத்து அந்த கும்பலிடம் ஒரு கோடி ரூபாய் பணம் வாங்கலாம் என கூறியுள்ளது. இதன்படி அந்த கும்பலை சேர்ந்த இருவர் மார்த்தாண்டம் அருகே சாங்கை பகுதியில் ஒரு கோடி ஹவாலா பணத்தை வாங்க ஜபமணியிடம் வர கூறியுள்ளது.
இந்த நிலையில் அந்த கும்பல் வர கூறியிருந்த பகுதியில் தனிப் பிரிவு போலீசார் மற்றும் மார்த்தாண்டம் போலீசார் பதுங்கி இருந்து அந்த கும்பலை சேர்ந்த மார்த்தாண்டம் அருகே பாளையங்கட்டி பகுதியை சேர்ந்த மணிகண்டன் (40) மற்றும் அருமனை அருகே வெள்ளாங்கோடு பகுதியை சேர்ந்த ஜான் (38) ஆகிய இருவரையும் மடக்கி பிடித்தனர். இவருடன் இருந்த அருமனை சேர்ந்த 3நபர்கள் தப்பிஓடினர்.
பிடிபட்ட இருவரிடம் இருந்து ஒரு சாக்கு மூட்டையில் ஏ ப்போர் பேப்பர் தாள்கள் பட்டியல்களை அடுக்கி வைத்து அதன் மீது 6000 ரூபாய் 500 ரூபாய் தாள்களை ஒட்டி வைத்திருந்ததை பறிமுதல் செய்தது. இவர்கள் இதுபோல் பலகோடி ரூபாய் ஹவாலா பணத்தை கொடுப்பதாக கூறி அந்த பணத்தை வாங்க வரும் போது ஹவாலா பணத்துக்கு பதிலாக கொண்டுவரும் கணக்கில் வந்த லட்சக்கணக்கான பணத்தை வாங்கிவிட்டதும் போலீஸ் வருவதாக கூறி அவர்களும் தப்பி ஓடி வருபவர்களையும் ஓட வைத்து விட்டு பணத்தை கொள்ளையடித்து வந்துள்ளது.
இந்த நிலையில் இன்று சிக்கிய இருவரையும் மார்த்தாண்டம் காவல்நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருவதுடன் தப்பி ஓடிய மூன்று நபர்களையும் தேடி வருகின்றனர். இந்த கும்பல் இதுபோல் பலரிடம் இதுபோல் மோசடி செய்ததாக தெரிய வந்துள்ளது. இவர்களது வலையில் சிக்கி பணம் இழந்த பலரும் அதிக பண ஆசைக்காக தங்கள் உழைத்து சம்பாதித்த பணத்தை பறிகொடுத்துவிட்டு புகார் அளிக்காமல் இருப்பது குறிப்பிடதக்கது.