முன்னாள் முதலமைச்சருக்கு எதிராக கருத்து தெரிவித்த பிரபல நடிகர்
கர்நாடகாவில் முதல்வராக இருந்த போது குமாரசாமி எதுவும் செய்யவில்லை என நடிகர் சேத்தன் குற்றம் சாட்டியுள்ளார்.
முன்னாள் கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி சில தினங்களுக்கு முன்பு கர்நாடகத்தில் எனக்கு 5 ஆண்டுகள் ஆட்சி செய்ய வாய்ப்பு வழங்கினால் புரட்சிகரமான மாற்றங்களை ஏற்படுத்துவேன்.அதற்கான ஆதரவை மக்கள் வழங்க வேண்டும் என தெரிவித்திருந்தார்.
இது அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் நடிகர் சேத்தன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் 5 ஆண்டுகள் ஆட்சி செய்ய மக்கள் வாய்ப்பு வழங்கினால் புரட்சிகரமன மாற்றங்களை செய்வதாக குமாரசாமி சொல்கிறார்.ஏற்கனவே அவர் 2 முறை முதலமைச்சராக இருந்த நேரத்தில் எதையும் செய்யவில்லை. 5 ஆண்டுகளில் புரட்சிகரமான மாற்றங்களை செய்ய அவரிடம் தொலைநோக்கு பார்வை இல்லை என வெளிப்படையாக கருத்து தெரிவித்துள்ளார்.