அரைகுறை உடைகளில் ஃபேஷன் ஷோ.. காஷ்மீரில் வெடித்த சர்ச்சை -பின்னணி என்ன?
காஷ்மீரில் நடந்த ஃபேஷன் ஷோ ஒன்று சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
காஷ்மீர்
காஷ்மீரில் பிரபல ஆடை நிறுவனம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் உரிமையாளர்களான சிவன் மற்றும் நரேஷ் உள்ளனர். இவர்கள் இருவரும் ஆடை வடிவமைப்பாளர்கள். இந்த நிலையில் நிறுவனத்தின் 15 ஆண்டு நிறைவு விழாவை குல்மார்க்கில் பேஷன் ஷோ நடத்தினர்.
அதில் பல பெண்கள் பலரும் ஆபாச உடைகளில் காட்சியளித்தனர். இந்த விவகாரம் காஷ்மீரில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து ரம்ஜான் மாதத்தில் ஆபாச உடைகளில் ஒய்யாரமாக நடந்து வந்தது வெட்கக்கேடானது எனப் பலரும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
ஃபேஷன் ஷோ
மேலும் ரம்ஜான் மாதத்தில் மட்டுமல்ல, ஆண்டின் எந்த நேரத்திலும் இது போன்ற பேஷன் ஷோக்களை நடத்தக் கூடாது எனக் கோரிக்கை விடுத்தனர்.இந்த விவகாரம் குறித்து ஆடை நிறுவனத்தின் உரிமையாளர்களான சிவன் மற்றும் நரேஷ் மன்னிப்பு கோரியுள்ளனர்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில் பதிவில்,’’யாருடைய மத உணர்வையும் புண்படுத்துவது தங்கள் நோக்கம் அல்ல எனக் கூறியுள்ளனர். பனிச்சறுக்கு வாழ்க்கை முறையில் புதுமையைப் புகுத்துவதே தங்களது நோக்கம் என்றும் கூறியுள்ளனர்.