வெஸ்ட் இண்டீஸ் தொடரில் புதிதாக சேர்க்கப்பட்ட இந்திய வீரர் - மகிழ்ச்சியில் ரசிகர்கள்
வெஸ்ட் இண்டீஸ் தொடரில் மேலும் ஒரு இந்திய வீரர் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதலில் நடந்த ஒருநாள் தொடரை இந்திய அணி 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது.
அடுத்ததாக மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரானது நடைபெறவுள்ளது. இன்று நடக்கும் முதல் டி20 போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடக்கவுள்ள நிலையில் இந்த தொடரில் காயம் காரணமாக இந்திய அணியில் கே.எல்.ராகுல், வாஷிங்டன் சுந்தர், அக்ஸர் படேல் ஆகியோர் விலகியுள்ளனர்.
கே.எல்.ராகுல், அக்ஸர் படேலுக்கு பதிலாக ஏற்கனவே ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் தீபக் ஹூடா ஆகியோர் சேர்க்கப்பட்டனர். இந்நிலையில் வாஷிங்டன் சுந்தருக்கு பதிலாக அணியில் நீண்ட நாட்களாக இடம் கிடைக்காமல் போராடி வரும் குல்தீப் யாதவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அவர் பிளேயிங் லெவனில் விளையாடுவாரா? என்பது ரசிகர்களின் மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது.