2 ஆண்டுகளாக வலியோடே திரிந்த யானை! என்ன நடந்தது?
கூடலூர் காயங்களோடு 2 ஆண்டுகளாக சுற்றிய காட்டு யானை கும்கி உதவியுடன் பிடிபட்டது. கூடலூரில் வால் பகுதி அருகே பலத்த காயங்களுடன் நடக்க இயலாமல் 2 ஆண்டுகளாக யானை ஒன்று சுற்றி திரிந்து வந்துள்ளது.
இதனை கண்ட பொதுமக்கள் பலரும் யானையை பிடித்து சிகிச்சை அளிக்க வேண்டும் என தொடர் கோரிக்கைகளை முன் வைத்தனர்.
இந்த கோரிக்கைகளை அடுத்து சம்பவ இடத்திற்கு கால்நடை மருத்துவர்களோடு வனத்துறையினர் விரைந்தனர். யானையின் இந்த பரிதாப நிலையை கண்டு யானை மீது மயக்க ஊசி செலுத்த கால்நடை மருத்துவர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.
இதனால் இந்த யானையை தற்போது வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தாமல் கும்கி யானைகளின் உதவியோடு பத்திரமாக மீட்டனர்.
ஒரு யானையை மயக்க ஊசி செலுத்தாமல் பிடிக்கப்படுவது இதுவே முதல் முறை என வனத்துறையினர் தெரிவித்தனர்.
தற்போது இந்த யானை முதுமலை யானைகள் மருத்துவ முகாமுக்கு அழைத்து செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
காயங்கள் ஆறிய பிறகு வனப்பகுதியில் விடப்படும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.