மீண்டும் திமுகவில் இணைந்த கு.க.செல்வம் - பாஜகவினர் அதிர்ச்சி..!
திமுகவிலிருந்து பிஜேபியில் இணைந்த கு.க.செல்வம் மீண்டும் திமுகவில் இணைந்துள்ள சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திமுகவில் கடந்த 2016 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் ஆயிரம் விளக்கு சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் கு.க.செல்வம்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நெருக்கமாக இருந்த வந்த கு.க.செல்வம் திமுகவின் முக்கிய பொறுப்புகளை வகித்தவர்.
இந்நிலையில் கு.க.செல்வம் எதிர்பார்த்த பதவிகள் கிடைக்காத நிலையில் அவர் டெல்லியில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை சந்தித்து பாஜகவில் இணைந்தார்.
தற்போது பாஜகவில் உள்ள அவர் மீண்டும் திமுகவில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது .
சென்னையில் கலைஞர் அறிவாலயம் சென்ற அவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே அவர் பாஜகவிலிருந்து திமுகவில் இணைந்ததால் பாஜகவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.