தமிழக பாஜகவில் பிராமண ஆதிக்கமா? சிக்கிய ராகவன்... செக் வைத்த மதன் !
தமிழக அரசியலில் கோடநாடு விவகாரம் அதிமுகவில் உள்ள ஒபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் அணியினருக்கு பெரும் தலைவலியாக அமைந்துவிட்டது. தமிழக அரசியலில் இது பேசு பொருளாகவும் அமைந்தது.
இந்த நிலையில் தற்போது இந்த விவாகாரத்தை எல்லாம் தூக்கி சாப்பிடும் விதமாக அமைந்திருக்கிறது கே.டி.ராகவனின் லீக்ஸ் வீடியோ. தமிழக பாஜகவில் கடந்த சில மாதங்களாக பிராமணர் மற்றும் பிராமணர் அல்லாதோர் என இரு பிரிவுகளாக பிரிந்து பனிப்போர் நீண்ட நாட்களாகவே இருந்து வருவதாகக் கூறப்படுகிறது.
இதற்கு உதாரணமாக எஸ்வி சேகரின் பேச்சு இருந்தது நாம் அறிந்ததே. இந்தவிவகாரம் தமிழக பாஜகவோடு நிற்காமல் டெல்லி மேலிடம் வரை சென்றது. ஆனால் ஒரு வழியாக எல்.முருகனுக்கு மத்திய இணையமைச்சர் பதவி கொடுத்து கட்சியினரின் வாயினை மூடியது தமிழக பாஜக.
தமிழக பாஜகவில் பிராமண சமூகத்தை சேர்ந்த ஒருவரை தலைவராக போட முடியாத சூழல் பாஜகவுக்கு உள்ளது. அவ்வாறு செய்தால் தமிழக மக்களின் வாக்கு வங்கிகளை பெற முடியாது என்பது பாஜக மேலிடத்திற்கு நன்றாக தெரியும்,அதனால் தான் அண்ணாமலைக்கு தலைவர் பொறுப்பை கொடுத்துள்ளது.

அண்ணாமலை இடைநிலை சாதியை சேர்ந்தவர் என்பதால் அனைவரையும் கவர வாய்ப்பு இருப்பதால் அண்ணாமலைக்கு தலைவர் பதவி கொடுத்தது பாஜக மேலிடம் , அவர் கட்சியில் இணைந்த சில மாதங்களிலேயே மிகப்பெரிய அங்கீகாரமும் விளம்பரமும் தமிழக பாஜகவிற்கு கிடைத்தது.
ஆகவே விரைவில் ஏராளமான இளைஞர்கள் பாஜகவிற்கு அரசியல் எதிர்காலம் என்று நினைத்து கட்சியில் இணைவார்கள். அடுத்து கோட்டை நம் வசம்தான் என கணக்கு போட்ட தமிழக பாஜகவிற்கு தற்போது பெரும் தலைவலியாக அமைந்துள்ளது கே.டி.ராகவன் லீக்ஸ்.
இந்த வீடியோவை வெளியிட்டுள்ள மதன் ரவிச்சந்திரன், அண்ணாமலைக்கு நற்சான்றிதழ்கொடுக்கிறார் ஆரம்பத்தில் கே.டி.ராகவனின் வீடியோவை அண்ணாமலையிடம் காட்டியதாகவும், அதை டெல்லி மேலிடத்துக்குச் சென்று காட்டினால் உடனடி நடவடிக்கை எடுக்க முடியாது என அண்ணாமலை சொல்லியதாகவும் மதன் வீடியோவில் குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல சில நாட்கள் கழித்து அந்த வீடியோவை ரிலீஸ் செய்யுங்கள் என அண்ணாமலை கூறியதாக அவர் அனுப்பிய வாட்ஸ்அப் மெசெஜையும் ஆதாரமாக வீடியோவில் கூறியுள்ளார் மதன். இந்த வீடியோவினை வெளியிடுவதன் மூலமாக தமிழக பாஜகவில் பிராமணர் ஆதிக்கத்தைக் குறைத்துவிடலாம் என அண்ணாமலையின் மாஸ்டர் ஃபிளான் என்று கூறினாலும் தான் ராகவனின் வீடியோ லீக் செய்ய சொல்லவில்லை என அண்ணாமலை மறுத்துள்ளார்.
மேலும் ராகவன் கடந்த சில நாட்களுக்கு முன்பு சிவசங்கர் பாபாவின் சொத்துகளை அபகரிப்பதாகவும் ராகவன் மீது நடிகர் சண்முகராஜா குற்றஞ்சாட்டியிருந்தார். அதே போல் பாபாவின் தீவிர பக்தரான சண்முகராஜா, ஆசிரமத்திலும் பள்ளியிலும் பிராமணர் அல்லாத மாணவர்களை ராகவனும் பாபாவின் நிர்வாகியாக இருக்கும் ஜானகியும் விரட்டி அடிப்பதாகவும், ஊழல் செய்வதாகவும் புகார் தெரிவித்திருந்தார்.
இவ்வாறு தொடர் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகி ராகவன் . தற்போது மதன் வெளியிட்ட் வீடியோ லீக்ஸினால் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்

.இந்த விவாகாரம் மூலமாக தமிழக பாஜகவில் பிராமண ஆதிக்கம் முடிவு வரலாம் அல்லது மதன் ரவிச்சந்திரனின் பழிவாங்கும் நடவடிக்கையாக இருக்கலாம் என அரசியல் விமர்சகர்கள் கூறும் நிலையில் பாஜகவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லையோ என்ற விமர்சனமும் எழுந்துள்ளது.
இதற்கு பதில் கூறியுள்ள மநில தலைவர் அண்ணாமலை பா.ஜ.கவின் பொறுப்பிலும் நிர்வாகத்திலும் உள்ள பெண்கள் மிகுந்த பாதுகாப்புடன் இருக்கிறார்கள் என்றும் குற்றம்சாட்டப்படும் நிர்வாகிகள் மீது விசாரணை நடத்த மாநிலச் செயலர் மலர்க்கொடி தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப்படும் என்றும் அறிவித்திருக்கிறார்.
Press statement pic.twitter.com/7iPCP5PqNZ
— K.Annamalai (@annamalai_k) August 24, 2021