ஷூட்டிங் ஸ்பாட்டில் அடிக்க வந்த உச்ச நடிகர் - போட்டுடைத்த கே.எஸ்.ரவிக்குமார்!
தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா குறித்து இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் பேசியுள்ளார்.
கே.எஸ்.ரவிக்குமார்
சபரி மற்றும் குரு சரவணன் இருவரும் இணைந்து 'கார்டியன்' என்ற படத்தை இயக்கியுள்ளனர். இதில் நடிகை ஹன்சிகா லீட் ரோலில் நடித்துள்ளார். இந்த படத்தின் பிரஸ் மீட் நேற்று நடைபெற்றது. இதில் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் கலந்து கொண்டார்.
அப்போது பேசிய அவர் "நடிகர் பாலகிருஷ்ணாவை வைத்து தெலுங்கில் ஒரு படம் எடுத்தோம். பாலகிருஷ்ணாவுக்கு ஒரு பழக்கம் இருக்கிறது. யாராவது அவரை பார்த்து சிரித்து விட்டால் பயங்கரமாக கோபம் வந்துவிடும்.
அவர் கிட்ட ஒரு முறை என் உதவி இயக்குநர் சரவணன் மாட்டிகிட்டான். சரவணன் கிட்ட சொல்லி ஃபேனை அவர் பக்கமா திருப்ப சொல்லியிருக்கார் பாலகிருஷ்ணா.
அடிக்க வந்தார்
அப்போது ஃபேனை திருப்பி பிடிக்க பாலகிருஷ்ணாவின் விக் லைட்டா ஷேக்கானதும் அவர் அட்ஜஸ்ட் செய்து இருக்கார். அதைப் பார்த்து சரவணன் சிரித்ததும், அவன் சிரித்ததை பாலகிருஷ்ணா பார்த்துவிட்டார்.
"டேய் எதுக்கு சிரிக்குற?" என கேட்டுக்கொண்டே இருக்க, நம்ம அசிஸ்டன்ட் ஆச்சே அடிச்சுட போறாரேன்னு ஓடி போய் சமாதானம் செய்ய போனேன். சார் அவன் நம்மளோட அசிஸ்டன்ட் தான் சார்னு நான் சொன்னதும் "லேது லேது... ஆப்போசிட் கேங்கு" அப்படினு பாலகிருஷ்ணா சொல்லிட்டு அவனை அடிக்க எழுந்து நிக்குறாரு.
இவன் அப்பவும் சிரிச்சுகிட்டே நிக்குறான். "ஏன்டா இன்னும் இங்கேயே நின்னுகிட்டு சிரிச்சுக்கிட்டு இருக்க? போடா" என சொல்லி பிறகு சரவணனை விரட்டிவிட்டேன்" என்று தெரிவித்துள்ளார்.