நீண்ட இடைவெளிக்கு பிறகு படம் இயக்கும் பிரபல இயக்குநர் - ரசிகர்கள் மகிழ்ச்சி

ksravikumar raghavalawrence
By Petchi Avudaiappan Nov 01, 2021 05:52 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in சினிமா
Report

நீண்ட இடைவெளிக்குப் பின் நடிகர் ராகவா லாரன்சின் தம்பி நாயகனாகும் படத்தை கே.எஸ்.ரவிக்குமார் இயக்கவுள்ளார். 

ரஜினி, கமல்,விஜய், அஜித், சிம்பு என தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களை இயக்கி தமிழ் சினிமாவின் 90’ஸ் கிட்ஸ்களின் பேவரைட் இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார் கடந்த 7 வருடங்களாக தமிழில் படங்கள் இயக்கவில்லை. கன்னடத்தில் சுதீப்பை வைத்து அவர் இயக்கிய படம் முடிஞ்சா இவன புடி என்ற பெயரில் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டது.

தமிழில் படம் இயக்காத போது கே.எஸ்.ரவிக்குமார் தெலுங்கு படங்களை இயக்கி வந்தார். இதனிடையே மலையாளத்தில் வெளியான ஆன்ட்ராய்டு குஞ்சப்பன் படத்தின் உரிமையை வாங்கி தமிழில் கூகுள் குட்டப்பன் என்ற பெயரில் தயாரித்து கே.எஸ்.ரவிக்குமார் நடித்துள்ளார் .

இந்நிலையில் 7 வருட இடைவெளிக்குப் பின் மீண்டும் அவர் படம் இயக்கவுள்ளார். இந்த படத்தில் ராகவா லாரன்சின் தம்பி எல்வின் நாயகனாக அறிமுகமாகிறார்.  இந்த படத்தில்  ராகவா லாரன்ஸ் முக்கியமான வேடம் ஒன்றில் நடிக்கவுள்ளார். இதனால் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.