கே.எஸ்.அழகிரியே தலைவராக தொடர வேண்டும் - கட்சி நிர்வாகிகள் வலியறுத்தல்
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவராக கே.எஸ்.அழகிரியை தொடரவேண்டும் என கட்சி நிர்வாகிகள் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவிடம் நேரில் வலியுறுத்தவுள்ளதாக முடிவெடுத்துள்ளனர்.
தமிழக காங்கிரஸ்
வரும் நாடாளுமன்ற தேர்தல் காங்கிரஸ் கட்சிக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுவதால் அதற்கான நடவடிக்கைகளில் தீவிரமாக அக்கட்சியின் தேசிய தலைமை இறங்கியுள்ளது. தமிழகத்தில் ஆளும் திமுக கூட்டணியில் காங்கிரஸ் இருந்தாலும், கட்சியில் கணிசமான மாற்றங்களை கொண்டுவர திட்டமிடடுள்ளதாக தகவல் வெளியாகின.
அழகிரியே தொடரவேண்டும்
அதன் முதற்கட்டமாக, கட்சியின் மாநில தலைவரை விரைவில் மாற்றம் செய்யப்படவுள்ளார் என சில தினங்கள் முன்பு தகவல் வெளிவந்தன. இந்நிலையில் தான், தற்போது கட்சியின் தலைவரை மாற்றும் முடிவை தேசிய தலைமை கைவிட வேண்டும் என்றும் மாநில தலைவராக கே.எஸ்.அழகிரியே தொடரவேண்டும் என கட்சி நிர்வாகிகள் முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
தலைவரை மாற்றும் முடிவை தேசிய தலைமை கைவிட வேண்டும் என்று வலியுறுத்த தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை நேரில் சந்தித்த வலியுறுத்தவுள்ளதாகவும் கூறப்படுகிறது.