பாஜகவை கண்டித்து ஜூன் 28 முதல் ஜூலை 1 வரை போராட்டம்- கே.எஸ்.அழகிரி

Indian National Congress BJP
By Sumathi Jun 07, 2022 06:41 PM GMT
Report

பாரதிய ஜனதா கட்சியை கண்டித்து வரும் 28 ஆம் தேதி முதல் 1 ஆம் தேதி வரை காங்கிரஸ் கட்சியினர் மறியல் போராட்டம் நடத்த போவதாக கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

 தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் அருகே ஈ.சி.ஆர். சாலையில் உள்ள தனியார் ரிசார்டில் உதய்பூர் காங்கிரஸ் கொள்கைப் பிரகடனம் பயிற்சி முகாம் இரண்டுகட்டமாக நடைபெற்றது.

பாஜகவை கண்டித்து ஜூன் 28 முதல் ஜூலை 1 வரை போராட்டம்- கே.எஸ்.அழகிரி | Ks Alagiri Press Meet

இறுதி நாளான இன்று தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி, திருநாவுக்கரசு, மற்றும் முன்னால் நிதி அமைச்சர் சிதம்பரம் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். மேடையில் பேசிய ப. சிதம்பரம், காங்கிரஸ் கட்சியின் தொண்டர்கள் துணிச்சலுடன் செயல்படவேண்டும்.

பாஜகவின் தவறான போக்கு

தினந்தோறும் சமுக வலைதளங்களில் எழுதவேண்டும்,பேசவேண்டும். பாரதிய ஜனதா கட்சி கற்பனை செய்துள்ள இந்தியா வேறு,காந்தியும் நேருவும் ,அம்பேத்காரும் உருவாக்கிய இந்தியா வேறு என்பதை முதலில் நாம் புரிந்துகொள்ளவேண்டும்.

2024 ல் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிபொறுப்பை ஏற்றால் புதிய பொருளாதார கொள்கை உருவாக்கப்படும் இதில் இளைஞர்கள் வேலைவாய்ப்பை ஏற்படுத்தவேண்டும்,கல்வியின் தரத்தை உயர்த்தவேண்டும்.

மருத்துவ துறையை சீர்படுத்தவேண்டும் என தெரிவித்தார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த கட்சியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி, பாரதிய ஜனதா கட்சியின் தவறான போக்கை கண்டித்து

மதசார்பற்ற கட்சிகளை ஒன்றிணைத்து வரும் 28 ஆம் தேதி முதல் 1 ஆம் தேதி வரை மறியல் போராட்டம் நடத்துவது என்றும், மற்றும் ஆகஸ்ட் மாதம் 9 தேதி ஒவ்வொரு மாவட்டத்திலும் நிர்வாகிகள் 75 கிலோமீட்டர் நடைபயணம் மேற்கொண்டு

மக்களை சந்தித்து காங்கிரஸ் கட்சியின் கொள்கைகளை பரப்பவேண்டும் மற்றும் இந்திய மக்களுக்கு செய்யும் அவாலத்தை எடுத்து கூறவேண்டும் பாரதிய ஜனதா கட்சி என இந்த இரண்டுநாள் பயிற்சி முகாமில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது என தெரிவித்தார்.