இலங்கை மக்களுக்கு உதவ தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் 10 லட்சம் நிதி உதவி - கே.எஸ். அழகிரி
பொருளாதார நெறுக்கடியில் சிக்கித்தவிக்கும் இலங்கை மக்களுக்கு உதவ தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் 10 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் அத்தியாவசிய பொருட்களின் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. அதேசமயம் உணவுப் பொருட்கள் உள்பட அத்தியாவசிய பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையல், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தொலைபேசியில் தொடர்புகொண்டு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை வைத்தார். இலங்கை மக்களுக்கு உதவுவது தொடர்பான தமிழக அரசின் கோரிக்கையை மத்திய அரசால் ஏற்றுக் கொள்ளப்பட்டதாக மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.
இதனையடுத்து, இலங்கை மக்களுக்கு தேவையான உதவிகளை செய்திட நன்கொடைகள் வழங்கிடுமாறு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று வேண்டுகோள் விடுத்தார்.
திமுக சார்பில் ரூ.1 கோடியும், அக்கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர்களின் ஒரு மாத சம்பளமும் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்கப்படும் என்று நேற்று அறிவிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து தேமுதிக சார்பில் இலங்கை மக்களுக்கு உதவ ரூ.5 லட்சம் வழங்கப்படும் என்று அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.

விஜயகாந்த்-ஐ தொடர்ந்து பொருளாதார நெறுக்கடியில் சிக்கித்தவிக்கும் இலங்கை மக்களுக்கு உதவ தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் 10 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.
மேலும், இலங்கை மக்களுக்கு உதவ 80 கோடி மதிப்புள்ள 40,000 டன் அரிசி வழங்கும் முதலமைச்சரின் முடிவு பாராட்டத்தகது எனவும் அவர் தெரிவித்திருக்கிறார்.