க்ரூணல் பாண்டியாவால் பிரச்சனையில் சிக்கிய 2 இந்திய வீரர்கள்...!
இலங்கை தொடரில் விளையாடி வரும் இந்திய அணி வீரர் க்ரூணல் பாண்டியாவுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது 2 சக வீரர்களுக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கை சென்றுள்ள ஷிகர் தவான் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, இலங்கை அணியுடன் மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றிய நிலையில் முதல் டி20 போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. இதனிடையே இன்று 2வது டி20 போட்டி நடக்கவிருந்தது.
ஆனால் இந்திய அணியின் ஆல் ரவுண்டரான க்ரூணல் பாண்டியாவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் போட்டி நாளை தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
பாண்டியாவுடன் தொடர்பில் இருந்த மேலும் 8 வீரர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் இங்கிலாந்து தொடருக்கான இந்திய அணியில் தேர்வான சூர்யகுமார் யாதவ் மற்றும் ப்ரித்வி ஷா ஆகியோர் இங்கிலாந்து செல்வதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த ராசியில் பிறந்தவர்கள் புலி போல் பதுங்கி இருந்து வேலைப்பார்ப்பார்களாம்.. நீங்க என்ன ராசி? Manithan
