‘தளபதி 66’ படத்தில் நடிகர் விஜய்யுடன் ஜோடி சேரும் பிரபல “பரம சுந்தரி” - வெளியான சுவாரஸ்ய தகவல்

thalapathy66 kritisanonandvijay kritisanoninthalapathy66
By Swetha Subash Mar 30, 2022 02:54 PM GMT
Report

தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்காக வலம் வரும் நடிகர் விஜய் தற்போது பீஸ்ட் திரைப்படத்தில் நடித்து வருகிறார். நெல்சன் திலீப்குமார் இயக்கிவரும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார்.

அனிருத் இசையமைக்கும் பீஸ்ட்டை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படம் ஏப்ரல் 13-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

‘தளபதி 66’ படத்தில் நடிகர் விஜய்யுடன் ஜோடி சேரும் பிரபல “பரம சுந்தரி” - வெளியான சுவாரஸ்ய தகவல் | Kriti Sanon To Pair With Vijay In Thalapathy 66

இந்த படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் தோழா உள்ளிட்ட படங்களை இயக்கிய வம்சி பைடிப்பள்ளி இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார்.

'தளபதி 66' என்று பெயரிடப்பட்டுள்ள இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. தில் ராஜு இந்த படத்தை தயாரிக்கவுள்ளார்.

இந்நிலையில் தளபதி 66-இல் விஜய்யுடன் நடிக்கவுள்ள நடிகை யாராக இருக்கும் என்ற எதிர்ப்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நீண்ட நாட்களாக இருந்து வருகிறது.

கீதா கோவிந்தம் படத்தில் நடித்து பிரபலமடைந்த 'ராஷ்மிகா மந்தனா' தான் விஜய்க்கு ஜோடியாக இந்த படத்தில் நடிக்க இருப்பதாக சமீபத்தில் தகவல் வெளியானது. பிறகு தமன்னா நடிப்பதாக கூறப்பட்டது.

‘தளபதி 66’ படத்தில் நடிகர் விஜய்யுடன் ஜோடி சேரும் பிரபல “பரம சுந்தரி” - வெளியான சுவாரஸ்ய தகவல் | Kriti Sanon To Pair With Vijay In Thalapathy 66

இந்நிலையில் இப்படத்தில் பிரபல இந்தி நடிகை 'க்ரித்தி சனோன்' கதாநாயகியாக நடிக்கவுள்ளார் என கூறப்படுகிறது.   இவர் இதற்குமுன் இந்தியில் வெளியான ஹவுஸ்ஃபுல்4, பரேலி கி பர்ஃபி போன்ற படங்களில் நடித்து நல்ல வரவேற்பை பெற்றார்.

மேலும் “பரம சுந்தரி” என அண்மையில் பட்டித்தொட்டி எங்கும் ஒளித்த பாடல் மூலம் தென்னிந்திய ரசிகர்களுக்கு இவர் பரீட்சயமானது குறிப்பிடத்தக்கது.

எனினும் 'தளபதி 66' படத்தில் விஜய்யுடன் ஜோடியாக க்ரித்தி சனோன் நடிக்கவுள்ளதாக எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இதுவரை வெளியாவில்லை.