சொத்துக்கள் முடக்கம் ? கிருத்திகா போட்ட டிவீட் : நடந்தது என்ன ?
கடந்த சில தினங்களுக்கு முன்னர் அமலாக்கத்துறையினர் லைகா நிறுவனம் மற்றும் கல்லல் அறக்கட்டளை அலுவலகங்களில் சோதனைகளை மேற்கொண்டனர். இந்த சோதனையில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை நடைபெற்றதாக தெரியவந்ததை அடுத்து அமலாக்கத்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தினர்.
சொத்துக்கள் முடக்கம்
அப்போது உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளைக்கும் பணப்பரிவர்த்தனை நடைபெற்றதாகவும், அதனால் இரு அறக்கட்டளை சொத்துக்களையும் முடக்கியதாக அமலாக்கத்துறை தங்கள் அதிகாரபூர்வ டிவிட்டர் கணக்கில் இருந்து பதிவிட்டன.
இந்த நிலையில் இது குறித்த தெளிவான விளக்கம் தற்போது வெளியாகியுள்ளது. M/S. Udhayanidhi Stalin Foundation என்று அமலாக்கத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் இருந்ததை திருமதி உதயநிதி என்று பொருள் எடுத்து கிருத்திகா உதயநிதியின் சொத்துகள் முடக்கம் என்றுசெய்தி வெளியானது.
— Udhay (@Udhaystalin) May 27, 2023
அதில் M/S என்பது நிறுவனங்களின் பெயர்களுக்கு முன் குறிப்பிடப்படுவது. இதன் விரிவாக்கம் Messers. Miss என்பது திருமணமாகாத இளம்பெண்கள், சிறுமிகளைக் குறிக்கும் சொல். அவர்களின் பெயருக்கு முன் பயன்படுத்த வேண்டியது. Ms எனும் பட்டம் திருமணமான வயதான பெண்கள் அல்லது திருமணம் ஆனவரா இல்லையா என்பது உறுதியாகத் தெரியாத வயதான பெண்களின் பெயருக்கு முன் பயன்படுத்த வேண்டியது.
Mrs திருமணமான எல்லா வயதுப் பெண்களின் பெயர்களுக்கு முன் பயன்படுத்தப்பட வேண்டிய பட்டம். Mr என்பது Mister 18 வயதுக்கும் மேற்பட்ட ஆண்களைக் குறிப்பது. Master என்பது 18 வயதுக்கும் குறைவான வயதுடைய சிறுவர்களைக் குறிப்பதாகும் ஆகவே அதில் குறிப்பிட்டுள்ள அது மிஸ்சஸ் உதயநிதி ஸ்டாலின் அல்ல. மெஸ்சஸ் உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளை.
அமலாக்கத்துறை தகவல்
M/S Udhayanidhi Stalin Foundation க்கு சொந்தமான அசையும் அசையா சொத்துக்கள் உட்பட சுமார் 40 கோடி அளவுக்கு முடக்கியுள்ளது அமலாக்கத்துறை. லைகா நிறுவனம் தொடர்பான வழக்கு ஒன்றில் ரூ.300 கோடி அளவுக்கு முறைகேடுகள் நடைபெற்றுள்ளது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் உதயநிதி அறக்கட்டளை பெற்ற ரூ.1 கோடிக்கான விவரங்களைத் தர அறக்கட்டளையின் உறுப்பினர்கள் தவறியதால் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை அறிவித்துள்ளது.
கிருத்திகா ட்வீட்
இதற்கு விளக்கம் கொடுக்கும் விதமாக , தற்போது தனது டிவிட்டர் பக்கத்தில் கிருத்திகா உதயநிதி பதிவிடுகையில், போலி செய்திகளை பரப்புவோர் . குறைந்தபட்சம் எனது புகைப்படத்தையாவது நன்றாக வைத்து விடுங்கள் என கிண்டலாக அந்த செய்திகளை மறுத்துள்ளார். மனைவி கிருத்திகா உதயநிதியின் டிவிட்டர் பதிவை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ரிடிவீட் செய்து சிரிக்கும் பதிவை பதிவிட்டுள்ளார்.