கேப்டன் தோனியால் பெரும் இழப்பை சந்தித்த இளம் வீரர் - அப்படி என்ன நடந்தது ?

dhoni csk msd krishnappagautam karnatakaplayer
By Swetha Subash Feb 14, 2022 08:23 AM GMT
Report

சிஎஸ்கே அணி செய்த பிழையால் இளம் வீரர் ஒருவர் பெரும் இழப்பை சந்தித்துள்ளது ரசிகர்களை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.

15-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் ஏலம் பெங்களூருவில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நேற்று முந்தினம் தொடங்கி இரண்டு நாட்களுக்கு விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது.

இந்த முறை வழக்கமான 8 அணிகளுடன் கூடுதலாக லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகளும் புதிதாக இணைந்து, 370 இந்திய வீரர்கள் மற்றும் 220 வெளிநாட்டு வீரர்கள் என மொத்தம் 590 வீரர்கள் ஏலத்தில் இடம்பெற்றிருந்தனர்.

இதில் மொத்தமாக 206 வீரர்கள் ஏலம் போனார்கள்.

இந்நிலையில், சர்வதேச போட்டிகளில் விளையாடாத இளம் வீரர்களுக்கு இந்த ஏலத்தில் பண மழை பொழிந்தது. பல இளம் வீரர்களையும் கோடிக்கணக்கில் ஏலம் எடுக்கப்பட்ட நிலையில்

சிஎஸ்கே அணி செய்த தவறால் கர்நாடகாவை சேர்ந்த கிருஷ்ணப்பா கௌதம் பெரும் இழப்பை சந்தித்துள்ளார்.

ரூ. 50 லட்சம் என்ற அடிப்படை தொகையுடன் தொடக்கத்தில் நல்ல போட்டியுடன் ஆரம்பித்த இவரின் ஏலம் சிறிது நேரத்திலேயே முடிந்து அதிர்ச்சி கொடுத்தது.

அவரை முதலில் கொல்கத்தா மற்றும் டெல்லி அணிகள் ஏலம் எடுக்க பணத்தை அதிகரித்தன. ஆனால் அதனை ஒரே ஒருமுறையோடு நிறுத்திக்கொள்ள இறுதியில் லக்னோ அணி ரூ.90 லட்சத்திற்கு கிருஷ்ணப்பா கௌதமை வாங்கியது.

இது அவருக்கு பல மடங்கு நஷ்டமாகும். ஏனென்றால், கடந்தாண்டு இதே கிருஷ்ணப்பா கௌதமை ரூ. 9 கோடிக்கு சிஎஸ்கே அணி ஏலம் எடுத்திருந்தது.

இதன் மூலம் சர்வதேச போட்டிகளில் விளையாடாமல் அதிகபட்ச தொகைக்கு சென்றவர் என்ற பெருமையை பெற்றிருந்தார் அவர்.

ஆனால் ரூ. 9 கோடி கொடுத்து எடுத்தும் அவருக்கு கடந்த சீசனில் ஒரு போட்டியில் கூட கேப்டன் தோனி விளையாட வாய்ப்பு தரவில்லை.

இதனால் அவரின் திறமையை நிரூபிக்க முடியாமல் போனதால் இந்தாண்டு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது.