3-வது டெஸ்ட் போட்டி; கே.எல்.ராகுல் விளையாடாதது எனக்கு மகிழ்ச்சிதான் - ஸ்ரீகாந்த் பேச்சு..!

Cricket KL Rahul Indian Cricket Team
By Nandhini Mar 05, 2023 07:48 AM GMT
Report

3-வது டெஸ்ட் போட்டியில் கே.எல்.ராகுல் விளையாடாதது எனக்கு மகிழ்ச்சியை கொடுக்கிறது என்று இந்திய கிரிக்கெட் வர்ணனையாளர் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.

கே.எல்.ராகுல் திருமணம்

சமீபத்தில் பாலிவுட் நடிகை அதியா ஷெட்டியை கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுல் திருமணம் செய்தார். சுனில் ஷெட்டி, கே.எல்.ராகுலுக்கும் அவரது மகள் அதியா ஷெட்டிக்கும் ரூ.50 கோடி மதிப்புள்ள அடுக்குமாடி குடியிருப்பை பரிசாக அளித்தார். விராட் கோலி, கே.எல் ராகுலுக்கு ரூ.2.17 கோடி மதிப்புள்ள பிஎம்டபிள்யூ காரை வழங்கினார். எம்.எஸ். தோனி ரூ.80 லட்சம் மதிப்புள்ள கவாஸாகி நிஞ்சா பைக்கை பரிசாக அளித்ததாக கூறப்படுகிறது.

தொடர்ந்து சொதப்பும் கே.எல்.ராகுல்

நடப்பு பார்டர் கவாஸ்கர் கோப்பையில் இதுவரை 3 இன்னிங்ஸ்களில் கே.எல்.ராகுல் விளையாடி இருக்கிறார். வெறும் 20,15,1 என்று மோசமான ரன்களில் அவர் அவுட்டானார். சமீப காலமாக அனைத்து வடிவ போட்டிகளிலும் அவர் தொடர்ந்து சொதப்பி வருகிறார்.

கே.எல்.ராகுலுக்கு இனி வாய்ப்பு கொடுக்கக் கூடாது என்று சமூகவலைத்தளங்களில் பலர் விமர்சனம் செய்து வருகிறார்கள்.

குறிப்பாக முன்னாள் வீரர் வெங்கடேஷ் பிரசாத் கூறுகையில், கே.எல்.ராகுலை பகைத்துக்கொண்டால் ஐபிஎல்-ல் பயிற்சியாளர், ஆலோசகர் பதவிகள் கிடைக்காது என்பதால் யாருமே வாய்திறக்கவில்லை என்று கூறிய விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

krishnamachari-srikkanth-former-cricketer

வர்ணனையாளர் ஸ்ரீகாந்த் கருத்து

இந்நிலையில், இது குறித்து இந்திய கிரிக்கெட் வர்ணனையாளர் ஸ்ரீகாந்த் கருத்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசுகையில்,

3-வது டெஸ்ட் போட்டியில் கே.எல்.ராகுல் விளையாடாதது மிகவும் மகிழ்ச்சி. ஒருவேளை அப்போட்டியில் விளையாடி ரன் குவிக்க முடியாமல் அவுட் ஆகியிருந்தால், அத்துடன் அவரது கிரிக்கெட் பயணமே முடிவுக்கு வந்திருக்கும். இதுபோன்ற பிட்ச்களில் ரன் குவிப்பது மிகவும் கடினமான விஷயம். விராட் போன்ற வீரருக்கே அது சவாலாக இருந்ததை பார்த்தோம் என்றார்.