இதுதான் சார் தமிழ்நாடு .. மாலை போட்ட ஐயப்ப பக்தர்கள்.. அன்னதானம் வழங்கிய இஸ்லாமியர்கள்

By Irumporai Dec 11, 2022 08:59 AM GMT
Report

மத நல்லிணக்கத்தை போற்றும் வகையில் மாலை அணிந்த ஐயப்பன் பக்தர்களுக்கு இஸ்லாமியர்கள் அன்னதானம் வழங்கிய நெகிழிச்சியான சம்பவம் அரங்கேறியுள்ளது.

மதநல்லிக்கணம்

கிருஷ்ணகிரி பழையபேட்டை  பகுதியில் இஸ்லாமிய இளைஞர் அமைப்பு சார்பில் ஆண்டுதோறும் மத நல்லிணக்கத்தை போற்றும் வகையிலும், ஹிந்து, முஸ்லிம் இடையே மத நல்லிணக்கத்தையும், ஒற்றுமையை எடுத்துரைக்கும் வகையிலும் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி மற்றும் ஐயப்ப பக்தர்களுக்கு பூஜை பொருட்கள் மற்றும் அன்னதானம் வழங்கி வருகின்றனர்.  

இதுதான் சார் தமிழ்நாடு .. மாலை போட்ட ஐயப்ப பக்தர்கள்.. அன்னதானம் வழங்கிய இஸ்லாமியர்கள் | Krishnagiri Muslims Offered Ayyappan Devotees

அந்த  வகையில்5ம் ஆண்டாக இஸ்லாமிய அமைப்பு சார்பில் அதன் தலைவர் முகமது அஸ்லாம் தலைமையில் இன்று கிருஷ்ணகிரி சேலம் சாலையில் உள்ள ஐயப்பன் கோயிலில் நடைபெற்ற சிறப்பு பஜனை மற்றும் வழிபாட்டிற்கு பூஜை பொருட்களை வழங்கினர்.

இஸ்லாமியார்கள் அன்னதானம்

மேலும் மாலை அணிந்து பஜனையில் பங்கேற்ற ஐயப்பன் பக்தர்களுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் ஏராளமான இஸ்லாமிய இளைஞர்கள் அன்னதான உணவுகளை பரிமாறினர்.

மத நல்லிணக்கத்தையும், இந்துமுஸ்லிம் ஒற்றுமையை வெளிப்படுத்தும் விதமாக நடத்தப்பட்ட இந்த அன்னதான நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.